- Home
- Astrology
- Meena Rasi Palan Nov 19: மீன ராசி நேயர்களே, இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்.! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.!
Meena Rasi Palan Nov 19: மீன ராசி நேயர்களே, இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்.! வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.!
Nov 19 Meena Rasi Palan: நவம்பர் 19, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 19, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம். இன்றைய நாள் முழுவதும் சற்று மேம்பட்ட பலன்கள் கிடைக்கலாம்.
உறுதியான மனநிலையுடன் செயல்களை செய்யத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். கற்பனைகளில் மூழ்காமல் நடைமுறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. சிறு முயற்சி கூட பெரிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் கவனமும், திட்டமிடலும் அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பட்ஜெட்டை திட்டமிடுவது நல்லது புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் இரண்டு முறை யோசித்து, நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, அதன் பின்னர் செய்யலாம். தொழில் மற்றும் வணிகம் மூலம் எதிர்பாராத பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று உறவுகளில் அனுசரித்துச் செல்வதும், விட்டுக் கொடுத்து போவதும் நல்லது. குடும்ப பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசினால் குழப்பங்கள் தீரும். பேசும் பொழுது வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் நிதானம் தேவை. சிறு தவறான புரிதல் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
பரிகாரங்கள்:
சனீஸ்வர பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் சனி பகவானை வழிபடுவது நல்லது. எந்த ஒரு செயலையும் தடையின்றி செய்து முடிக்க விநாயகரை வழிபடலாம். இன்று அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.