MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mars Transit 2026: ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி.! லட்சாதிபதி யோகம் பெறும் 4 ராசிகள்.! அடுத்த 45 நாட்களுக்கு பட்டையை கிளப்பப்போறீங்க.!

Mars Transit 2026: ஆரம்பமாகும் செவ்வாய் பெயர்ச்சி.! லட்சாதிபதி யோகம் பெறும் 4 ராசிகள்.! அடுத்த 45 நாட்களுக்கு பட்டையை கிளப்பப்போறீங்க.!

Mars Transit 2026: கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் இன்று மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாக இருக்கிறார். இது சில ராசிகளுக்கு செல்வ, செழிப்பை வழங்குகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 11 2026, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sevvai Peyarchi In Mesha Rasi
Image Credit : Asianet News

Sevvai Peyarchi In Mesha Rasi

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். அவர் ஆற்றல், துணிச்சல், வீரம், தைரியம் மற்றும் நிலம் ஆகியவற்றின் காரகராவார். பிற்பகல் 12:47 மணிக்கு அவர் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. தொழில் வளர்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிப்பு, முடிவெடுக்கும் திறன்கள் வலுப்பெறவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே வருவதால் அடுத்த 45 நாட்கள் உங்களுக்கு பொற்காலமாக அமையும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். இந்த காலகட்டம் நிதி நிலைமை மற்றும் வெற்றியை குறிக்கிறது. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். புதிய தொழிலை தொடங்க அல்லது புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு இது ஏற்ற நேரமாகும். நிலம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும்.

Related Articles

Related image1
Indra Yog 2026: இன்று உருவாகும் இந்திர யோகம்: 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பொற்காலம் ஆரம்பம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Surya Gochar 2026: ராகு-கேதுவுக்கு நடுவில் சூரியன்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், அரசு வேலை நிச்சயம்.!
36
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் பெயர்ச்சியானது பல வழிகளில் நன்மையை வழங்க இருக்கிறது. கடினமாக உழைத்தும் பலன் கிடைக்கவில்லையே என்று ஏங்கி வருபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரங்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் புதிய அத்தியாயம் அல்லது பதவி உயர்வு தேடி வரும். அரசுப. பணிகள் அல்லது போட்டித் தேர்வுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது, முதலீடுகள் செய்வது ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.

46
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

செவ்வாய் பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தையும், மாற்றத்தையும் வழங்க இருக்கிறது. சமூகத்தில் உங்கள் கௌரவத்தை உயர்த்தவும், அந்தஸ்தை அதிகரிக்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வர வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் நீண்ட கால ஆசைகள் மற்றும் இலக்குகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

56
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் பெயர்சியானது நிதி ஆதாயங்களையும், புதிய வாய்ப்புகளையும் கொண்டு வர இருக்கிறது நீங்கள் செய்த பழைய முதலீடுகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். புதிய தொடக்கங்களுக்கு இது சிறந்த காலமாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் தோன்றும். அதிர்ஷ்டம் கூடும். வெளிநாடு அல்லது நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவுகள் மூலம் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். பெரியவர்களின் ஆட்சி கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உருவாகும் ஆரோக்கியம் சிறக்கும்.

66
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகாலட்சுமி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறப் போகுது.. இனி அதிர்ஷ்ட மழை தான்!
Recommended image2
Indra Yog 2026: இன்று உருவாகும் இந்திர யோகம்: 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பொற்காலம் ஆரம்பம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Astrology : சந்திரன்-கேது சேர்க்கை... இந்த 4 ராசிக்காரர்களுக்கு அடிமேல் அடி விழப்போகுது..!
Related Stories
Recommended image1
Indra Yog 2026: இன்று உருவாகும் இந்திர யோகம்: 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பொற்காலம் ஆரம்பம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Surya Gochar 2026: ராகு-கேதுவுக்கு நடுவில் சூரியன்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட், அரசு வேலை நிச்சயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved