- Home
- Astrology
- மேஷ ராசியில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய்: 5 ராசிகளுக்கு ஏற்படப்போகும் சவால்கள்.! ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் பிரச்சனைகள்.!
மேஷ ராசியில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய்: 5 ராசிகளுக்கு ஏற்படப்போகும் சவால்கள்.! ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் பிரச்சனைகள்.!
Mars Transit 2026 : செவ்வாய் பகவான் மே 11 ஆம் தேதி முதல் மேஷ ராசியில் ஆட்சி பலம் பெற்று சஞ்சரிக்க இருக்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை தரக்கூடும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

Mars Transit 2026
வேத ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் மே11, 2026 மதியம் 12:47 மணிக்கு தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். செவ்வாய் பகவான் ஆற்றல், இலட்சியம், ஆக்ரோஷம், வேகம் மற்றும் செயல்பாடுகளுக்கு காராகர் ஆவார். இவர் வலுவான சக்தி தரக்கூடியவராக இருந்தாலும், அவரது மேஷ ராசி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை தரக்கூடும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் நிகழ இருக்கிறது. இதன் காரணமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும். தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படலாம். பண இழப்புகள் ஏற்படலாம். உங்கள் நிதானத்தை இழக்கும் சூழல் உருவாகும். வார்த்தைகளில் கட்டுப்பாடு அவசியம். உங்கள் எதிரிகள் கடுமையான பிரச்சனைகளைத் தர வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நஷ்டத்தைக் கொடுக்கலாம். தேவையற்ற வம்பு, வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்காமல் போகலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார். எனவே நீங்கள் நிதி சார்ந்த விஷயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. இல்லையென்றால் பணக்கஷ்டம், கடன் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். நிதி நிலைமைகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். பேச்சு, செயல் அனைத்திலும் பொறுமை காக்க வேண்டியது அவசியம். வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்து எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. பணியிடத்தில் அனைவரிடமும் நல்லுறவை பேண வேண்டியது அவசியம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் ஸ்தானமான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தொழில் தொடர்பாக பல சவால்களை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமாக மாறக்கூடும். உடல் நலம் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். வாகனம் ஓட்டும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்தால், மற்றொரு பிரச்சனை தலை துக்கத்தொடங்கும். எனவே கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் பகவான் விருச்சிக ராசியின் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். குறிப்பாக பணியிடத்தில் நடக்கும் அரசியல் உங்களுக்கு சங்கடத்தை தரும். குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் இருந்து முழுமையான ஆதரவு கிடைக்காமல் போகலாம். எதிர்பாராத விதமாக செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக ஆரோக்கியப் பிரச்சனைக்காக மருத்துவச் செலவுகள் உயரும். இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்காமல் போகலாம். அனைத்து சவால்களை கவனத்துடன் எதிர்கொள்வதன் மூலம் யோகத்தை அடைய முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சவாலான காலகட்டம் ஏற்படும். வண்டி, வாகனம் ஓட்டும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். பண பரிவர்த்தனைகளின் பொழுது அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் வார்த்தையை கவனமாக பயன்படுத்தவும். குடும்ப உறவுகளில் எதிர் வினைகளை சந்திப்பீர்கள். உங்கள் நிதிநிலை மோசமடையக்கூடும். சில சமயம் இழப்புகளை சந்திக்கலாம். இதனால் மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும். இறை நம்பிக்கையுடன் இருப்பது தடைகளை கடக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

