- Home
- Astrology
- Mars Transit : பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த 5 ராசிகளின் வாழ்க்கை ஓஹோனு மாறப்போகுது...!
Mars Transit : பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த 5 ராசிகளின் வாழ்க்கை ஓஹோனு மாறப்போகுது...!
Mars in Poosa Nakshatra : செவ்வாய், சனியின் அதிபதியான நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இது சில ராசிகளின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சுப காலத்தைத் தொடங்கும். எந்தெந்த ராசிகளுக்கு செவ்வாய் நன்மை பயக்கும் என்பதை பார்க்கலாம்.

Mars Transit in Poosa Nakshatra
ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், வீரியம், ஆற்றல், செயல் வேகம் மற்றும் தன்னம்பிக்கையின் காரணியாகக் கருதப்படுகிறார். பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார். தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், செப்டம்பர் 19ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைய உள்ளார்.
கடக ராசியில் ஏற்கனவே வியாழன் மற்றும் சுக்கிரன் சஞ்சரித்து வருவதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால் செவ்வாயின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் பூச நட்சத்திரத்தில் நுழைகிறார். பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி என்பதால், செவ்வாய் சனி ஆதிக்கம் கொண்ட நட்சத்திரத்தில் பயணிப்பது சில ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்த கிரக நிலை காரணமாக சிலருக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி, சொத்து மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கிடைக்கலாம். அதே நேரத்தில் சில ராசிக்காரர்கள் பண விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், செவ்வாயின் இந்த சஞ்சாரம் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமாகவும், கலவையான பலன்களையும் தரக்கூடும் என்பதை பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கடகத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். குறிப்பாக கடன் தொடர்பான சுமைகள் குறைவதற்கான சூழல் உருவாகலாம். ஏற்கனவே மேற்கொண்ட முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
தொழில் செய்பவர்களுக்கு புதிய வருவாய் வழிகள் திறக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீடு அல்லது நிலம் போன்ற சொத்துகளை வாங்கும் முயற்சிகளிலும் முன்னேற்றம் காணப்படலாம்.
கணவன்-மனைவி இடையே நிதி சார்ந்த புரிதல் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், பெரிய அளவில் முதலீடு செய்யும் முன் ஆவணங்கள் மற்றும் ஒப்பந்த விதிமுறைகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு செவ்வாய் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால், போட்டி மற்றும் எதிரிகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கலாம். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
கடன் சுமை குறைவதுடன், உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைத்து, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகளையும் முடிக்க முடியும்.
சொந்த வீடு அல்லது வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்ப உறவுகளிலும் அமைதி நிலவும். பணியிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் சஞ்சாரம் முழுமையான நன்மையையோ தீமையையோ தராமல் கலவையான பலன்களை வழங்கலாம். பொருளாதார நிலை ஓரளவு சீராக இருந்தாலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம்.
எதிரிகள் அல்லது போட்டியாளர்களால் சில இடையூறுகள் வரலாம். எனவே, பிரச்சனைகளை பதற்றமின்றி எதிர்கொண்டு செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் பலமுறை ஆலோசிப்பது நல்லது.
பணியிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலைகளை தவிர்க்கவும். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு உடனடி லாபம் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், வருமானம் மெதுவாக உயர்ந்து நிலையான பலனை வழங்கும் வாய்ப்பு உள்ளது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல வகையிலும் சாதகமாக அமையக்கூடும். பூச நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.
நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. வருமானத்திற்கான புதிய வழிகளும் உருவாகலாம். பணியிடத்தில் உங்கள் பேச்சுத்திறன் மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் மேம்பட்டு, முக்கியமான வாய்ப்புகளைப் பெற உதவும்.
தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வணிக வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையக்கூடும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கலாம். தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், பெரிய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் அவசர முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு செவ்வாய் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பலன்கள் கலவையாக இருக்கலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய காலமாக இது அமையும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சில வேலைகள் முடிவுக்கு வரலாம். பணம் தொடர்பான புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
வீடு அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளும் சாதகமாக நகரலாம். கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதையும் உயரக்கூடும்.
ஆனால், இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதில் கவனம் தேவை. மேலும், அலுவலகத்தில் முக்கியமான தகவல்கள் அல்லது ரகசியங்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.

