MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு பெயர்ச்சி 2026: இனி 'இந்த' 4 ராசிக்காரர்களை அடிச்சுக்கவே முடியாது.. அதிர்ஷ்டக் கதவை தட்டும் யோகம்!

குரு பெயர்ச்சி 2026: இனி 'இந்த' 4 ராசிக்காரர்களை அடிச்சுக்கவே முடியாது.. அதிர்ஷ்டக் கதவை தட்டும் யோகம்!

Guru Peyarchi 2026: அக்டோபர் மாதத்தில் குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 21 2026, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குரு பெயர்ச்சி 2026
Image Credit : AI

குரு பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் அதிர்ஷ்டம், அறிவு, சுபயோகம் மற்றும் செல்வ வளத்தின் காரணியாக விளங்கும் குரு பகவான், அக்டோபர் 2026-இல் மிக முக்கிய கிரக பெயர்ச்சியை மேற்கொள்ளவுள்ளார். தற்போது தன் உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரித்து வரும் அவர் வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குருவின் இந்த ராசி மாற்றம், அனைத்து ராசிகளிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு யோகக் காலமாக அமையவுள்ளது. குறிப்பாக தன்னம்பிக்கை உயர்வு, தலைமைப் பண்பு, தொழில் வளர்ச்சி, சமூகத்தில் தனி மரியாதை மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்களை இந்த பெயர்ச்சி அள்ளித் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Pixabay

1. மேஷம்

மேஷ ராசிக்கு 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆவது அதிர்ஷ்டத்தின் கதவுகளை அகலத் திறக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும்; திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழிலை விரிவாக்க புதிய கூட்டாண்மைகளும், நல்ல லாபம் தரும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். முடங்கிக் கிடந்த வேலைகள் சுலபமாக நிறைவடையும்.

Related Articles

Related image1
Varalakshmi Vratam: வரலட்சுமி விரதம் வந்தாச்சு… இனி இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை தான்..!
Related image2
Astrology Tamil: 2026 இறுதியில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.. தொழில், உத்தியோகத்தில் அசுர வளர்ச்சி!
35
2. கடகம்
Image Credit : Pixabay

2. கடகம்

கடக ராசிக்கு 2-ஆம் வீடான தன ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்வது பொருளாதார ரீதியாக பெரும் பலனைத் தரும். புதிய வருமான வழிகள் தென்படும். நிதி நெருக்கடிகள் முற்றிலுமாக விலகும். கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

45
3. சிம்மம்
Image Credit : Pixabay

3. சிம்மம்

தன் சொந்த ராசியான சிம்மத்தில் (1-ஆம் வீடு) குரு பகவான் பிரவேசிப்பது, சிம்ம ராசியினருக்குப் பொற்காலத்தின் தொடக்கமாகும். சுயநம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உங்களின் முடிவெடுக்கும் திறன் பாராட்டைப் பெறும். மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் உடனடியாகக் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தொடங்க இது உகந்த காலம்; அது எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபத்தைத் தரும்.

55
4. விருச்சிகம்
Image Credit : Pixabay

4. விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு 10-ஆம் இடமான கர்ம ஸ்தானத்திற்கு குரு செல்வதால், தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் அதிரடி மாற்றங்கள் நிகழும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்திகள் அல்லது வேலை வாய்ப்புகள் தேடி வரும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் வியாபாரம் சூடுபிடிக்கும்; கணிசமான லாபம் ஈட்டுவீர்கள். பணப் பிரச்சனைகள் ஒவ்வொன்றாகச் சரியாகும். நீண்ட நாள் உழைப்பிற்குப் தகுந்த பலன் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெளிநாடு செல்லும் யோகம் உடைய அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் தெரியுமா?
Recommended image2
Revati Pokkisham Yoga : பொக்கிஷங்களை அள்ளப் போகும் 4 ராசிகள்! ரேவதி பொக்கிஷ யோகத்தால் இனி தொட்டதெல்லாம் ஹிட்டு!
Recommended image3
Astrology: சுக்கிரன் தோளில் சவாரி செய்யும் 5 ராசிகள்.! பண பலமும் அதிகார பலமும் இனி இவர்களுக்கே.!
Related Stories
Recommended image1
Varalakshmi Vratam: வரலட்சுமி விரதம் வந்தாச்சு… இனி இந்த 3 ராசிகள் வீட்டில் பண மழை தான்..!
Recommended image2
Astrology Tamil: 2026 இறுதியில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.. தொழில், உத்தியோகத்தில் அசுர வளர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved