- Home
- Astrology
- 4 ராசிகளுக்கு உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: அதிர்ஷ்டம், பணம், புகழ் கிடைக்கும்!
4 ராசிகளுக்கு உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: அதிர்ஷ்டம், பணம், புகழ் கிடைக்கும்!
Malavya Bhadra Rajayoga Palan in Tamil : ஜூன் மாதத்தில், சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் சஞ்சரித்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் சஞ்சரித்து பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் 4 ராசிகளுக்கு ராஜயோகம் உருவாகிறது.

மாளவ்ய ராஜயோகம் மர்ரும் பத்ரா ராஜயோகம்
Malavya Bhadra Rajayoga Palan in Tamil : மீன ராசியில் உள்ள புதன் பகவான் வரும், ஜூன் 6 ஆம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குச் செல்கிறார். இது பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதன் பலன் ஜூன் 22 வரை இருக்கும். அதன் பிறகு புதன் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். மே 31 அன்று சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைந்து, ஜூன் 29 அன்று தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைந்து ஜூலை 25, 2025 வரை அங்கேயே இருப்பார். ரிஷப ராசிக்குள் நுழைந்தவுடன், மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. ஜூன் மாதத்தில் உருவாகும் பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மிதுன ராசிக்கான மாளவ்ய மற்றும் பத்ரா ராஜயோக பலன்
பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகம் அதிர்ஷ்டத்தைத் தரும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் வரலாம். திடீர் பணவரவு கிடைக்கலாம். நிதித் திட்டங்கள் வெற்றி பெறும். புகழ் மற்றும் மரியாதை கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் விரைவாக முடியும். கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம்.
துலாம் ராசி பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகம் பலன்
பத்ரா மாளவ்ய ராஜயோகம் நன்மை பயக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலைக்குச் செல்பவர்களுக்குச் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கலாம். தொழிலில் லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெறலாம். உள்நாடு மற்றும் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். மதச் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும்.
கன்னி ராசிக்கான மாளவ்ய மற்றும் பத்ரா ராஜயோகம் பலன்
பத்ரா ராஜயோகம் நன்மை பயக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்குச் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்தக் காலம் சாதகமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். ஊடகம், கலை, இசை, கல்வி அல்லது வங்கித் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல லாபம் அடையலாம்.
மீனம் பத்ரா மற்றும் மாளவ்ய ராஜயோகம்
பத்ரா ராஜயோகம் நன்மை பயக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்குச் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கலாம். நிதி நிலைமை வலுவாக இருக்கும். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். தொழிலில் திடீரென பெரிய லாபம் கிடைக்கலாம்.