MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மகாலட்சுமி ராஜயோகம்.. தீபாவளிக்கு முன் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்! பண மழை!

மகாலட்சுமி ராஜயோகம்.. தீபாவளிக்கு முன் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்! பண மழை!

Mahalakshmi Rajyogam 2026: நவம்பர் 1-ல் கடக ராசியில் செவ்வாய்-சந்திரன் இணைவால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் கடகம், மேஷம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய 4 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டமும், நிதி நன்மைகளும் கிடைக்கப் போகிறது.

2 Min read
Author : Rayar A
Published : Oct 28 2026, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மகாலட்சுமி ராஜயோகம் 2026
Image Credit : AI

மகாலட்சுமி ராஜயோகம் 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாக போற்றப்படும் செவ்வாய் பகவான், வீரம், துணிச்சல், தைரியம் மற்றும் வலிமைக்குரிய காரணியாக விளங்குகிறார். சுமாா் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக்கூடிய செவ்வாய் தற்போது கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில், மனதின் காரணியாக கருதப்படும் சந்திர பகவான் கடக ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார்.

இதன் காரணமாக கடக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சிறப்பு இணைவு நிகழ்ந்து, சக்திவாய்ந்த 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகவுள்ளது. குறிப்பாக, தீபாவளித் திருநாளுக்கு சற்று முன்பாக, வரும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று உருவாகும் இந்த சுபயோகத்தால், அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத அதிர்ஷ்டமும், மகத்தான நிதி நன்மைகளும் தேடிவரப் போகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. கடகம்
Image Credit : Asianet News

1. கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களின் முதல் வீட்டிலேயே இந்த மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இவர்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பான முன்னேற்றத்தை காணும். பல நாட்களாக தடைபட்டு கிடந்த முக்கியமான வேலைகள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நிறைவேறும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள பல புதிய வழிகள் திறக்கும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு தங்களின் அர்ப்பணிப்புக்கும் கடுமையான உழைப்புக்கும் உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.

35
2. மேஷம்
Image Credit : Asianet News

2. மேஷம்

மேஷ ராசியின் நான்காம் வீட்டில் இந்த ராஜயோகம் அமைகிறது. இதன் தாக்கத்தால் இவர்களின் வியாபாரம் மற்றும் தொழில் துறையில் எதிர்பாராத அளவுக்கு லாப வெள்ளம் பெருகும். நீண்ட நாட்களாக வேலைவாய்ப்பை தேடி அலைபவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். எனினும், நிதி சார்ந்த எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்கும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய முதலீடுகளைத் திட்டமிடுபவர்கள், அது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்து கொண்டு இறங்குவது சிறந்தது.

45
3. துலாம்
Image Credit : Asianet News

3. துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் இந்த யோகம் மலர்கிறது. இதன் மூலம் இவர்களின் நிதி நிலை முன்புைவிட பலமடங்கு மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற பதவி உயர்வுகளும் தேடி வரக்கூடும். தொழில்முனைவோருக்கு புதிய மற்றும் லாபகரமான வணிகத் தொடர்புகள் கிடைக்கும். இந்தத் தொடர்புகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைத் தரும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பொன்னான வாய்ப்புகள் கைகூடும். அதே நேரத்தில், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே சேமிப்பை உயர்த்துவது சாத்தியமாகும்.

55
4. கும்பம்
Image Credit : Asianet News

4. கும்பம்

கும்ப ராசியின் ஆறாம் வீட்டில் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உதயமாகிறது. இதனால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கண்மூடித்தனமான வளர்ச்சிக்கும், பதவி உயர்வுகளுக்கும் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எங்கேயோ முடங்கிப் போய்விட்டதாக நினைத்த பழைய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய யுக்திகளையும் திட்டங்களையும் புகுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை பார்க்க முடியும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடையலாம். கடின உழைப்புக்கான பலன் கைமேல் கிடைக்கும் காலமிது.

பொறுப்புத் துறப்பு

இந்த செய்தி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான ஜோதிட நம்பிக்கைகள், பாரம்பரிய முறைகள் மற்றும் ஆன்மீகக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமே. இதற்கு அறிவியல் பூர்வமான உறுதியான ஆதாரங்கள் இல்லை. வாசகர்கள் இவற்றை ஒரு பொதுவான தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Dhwaj Yoga 2026: தீபாவளிக்கு முன் உருவாகும் த்வஜ யோகம்! 4 ராசிகளுக்குப் பணவரவு கொட்டும்.. யாருக்கெல்லாம்?
Recommended image2
நவம்பர் 1 முதல் 5 வரை அதிர்ஷ்டம் கொட்டுமா? உருவாகும் 2 யோகங்கள்.. சுப பலன் பெறப்போகும் 6 ராசிகள்!
Recommended image3
Malavya Raja Yoga : நவம்பரில் ஆரம்பமாகும் சுக்கிரனின் ஆட்டம்... மாளவ்ய ராஜ யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள்!
Related Stories
Recommended image1
Astrology: துலாத்தில் சூரியன்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டப் போகுது!
Recommended image2
Astrology: குரு பகவான் ஆசியால் ராஜயோகம் பெறும் 4 ராசிகள்.. இனி பணமழை தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved