MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சிவராத்திரிக்கு பிறகு பணக்காரனாகும் ராசிகள் - 5 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!

சிவராத்திரிக்கு பிறகு பணக்காரனாகும் ராசிகள் - 5 கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!

பஞ்சகிரஹி யோகத்தால் உண்டாகும் நன்மையால் இந்த 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 14 2026, 11:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மஹா சிவராத்திரி பஞ்சகிரஹி யோக பலன்கள்
Image Credit : Getty

மஹா சிவராத்திரி பஞ்சகிரஹி யோக பலன்கள்

2026-ம் ஆண்டு மஹாசிவராத்திரி ஒரு ஆன்மீகத் திருவிழாவாக மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியாகவும் மகா சக்தி வாய்ந்ததாக அமையவுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து முக்கிய கிரகங்கள் ஒன்றிணையும் 'பஞ்சகிரஹி யோகம்' இந்த நன்னாளில் கூடிவருகிறது. இந்த விசேஷமான அமைப்பால் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்குப் பொற்காலம் தொடங்குகிறது. அந்த ராசியினர் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
பஞ்சகிரகி யோக பலன்கள்
Image Credit : Getty

பஞ்சகிரகி யோக பலன்கள்

வரும் பிப்ரவரி 15, ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ள மகாசிவராத்திரி, பல தசாப்தங்களில் இல்லாத ஒரு மகா அதிசயத்தைக் கொண்டுவருகிறது! கும்ப ராசியில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு என ஐந்து கிரகங்கள் ஒன்றாகக் கூடி 'பஞ்சகிரஹி யோகத்தை' உருவாக்குகின்றன. ஈசனின் அருளோடு இந்த அபூர்வ கிரகச் சேர்க்கையும் இணைவதால், ஐந்து ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. கையில் பணப்புழக்கம் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் இரட்டிப்பாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் உங்கள் ராசியாக இருக்குமா? என்று பார்க்கலாம்.

37
மேஷ ராசி பஞ்சகிரக யோக பலன்கள்
Image Credit : Gemini

மேஷ ராசி பஞ்சகிரக யோக பலன்கள்

இந்த ஆண்டு மகாசிவராத்திரி அன்று நிகழும் ஐந்து கிரகங்களின் இணைவு, குறிப்பிட்ட ராசியினரின் சமூக அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பன்மடங்கு உயர்த்த உள்ளது. எதிர்காலத்தில் பெரும் லாபத்தைத் தரக்கூடிய புதிய தொழில்கள் அல்லது முயற்சிகளைத் தொடங்க இதுவே மிகச்சிறந்த தருணம். குறிப்பாக, வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களின் நீண்ட நாள் கனவு இந்த காலகட்டத்தில் நனவாகும். தம்பதிகளிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, கணவன்-மனைவி உறவு முன்பை விட பலப்படும். ஈசனின் அருளால் இவர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது!

47
கடக ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
Image Credit : Getty

கடக ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்

தற்போது நிகழ்ந்துள்ள பஞ்சகிரக யோகம் சில ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. குறிப்பாக, பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் வாரிசு யோகம் குறித்த சுப செய்திகள் இல்லம் தேடி வரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நீதிமன்ற வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் மனதிற்குப் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தரும். உடல் ஆரோக்கியம் சீராகி, புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். சோதனைகள் முடிந்து சாதனைகள் தொடங்கும் காலமிது!

57
சிம்மம் ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
Image Credit : Asianet News

சிம்மம் ராசிக்கான பஞ்சகிரக யோக பலன்கள்

அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும் காலம் இது. பெரியவர்களின் ஆலோசனையோடு தொடங்கும் புதிய காரியங்கள் வெற்றியில் முடியும். காதல் வாழ்க்கை இனிக்கும். வீடு, கடை போன்ற சொத்துக்களை வாங்கும் கனவு நனவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, மன நிம்மதி கிட்டும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது!

67
துலாம் ராசியினருக்கான பஞ்சகிரக யோக பலன்கள்
Image Credit : Asianet News

துலாம் ராசியினருக்கான பஞ்சகிரக யோக பலன்கள்

பஞ்சகிரகங்களின் சேர்க்கையால் இந்த ராசியினருக்குப் பண வரவு அபரிமிதமாக இருக்கும். வேலையின்றித் தவிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற சிறந்த வேலைவாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட சுப காரியங்கள் அல்லது தொழில் திட்டங்களுக்கு மாமியார் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். குடும்பத்தினருடன் புனித யாத்திரைகள் சென்று வரும் பாக்கியம் உண்டாகும். சேமிப்புகள் உயர்ந்து, நிதி ரீதியாக நீங்கள் ஒரு வலுவான நிலையை அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் நீங்கி பொற்காலம் தொடங்குகிறது.

77
தனுசு ராசியினருக்கான பஞ்சகிரஹி யோகத்தின் பலன்கள்
Image Credit : Asianet News

தனுசு ராசியினருக்கான பஞ்சகிரஹி யோகத்தின் பலன்கள்

பஞ்சக்கிரஹி யோகத்தின் முழுமையான அருளாசி இந்த ராசியினருக்குக் கிடைக்கப் போகிறது. மன ரீதியாக நிலவி வந்த குழப்பங்கள் அகன்று, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார ரீதியாகப் பல வழிகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற வியத்தகு வெற்றியைப் பெறுவார்கள். பொது வாழ்வில் அல்லது அரசியலில் இருப்பவர்களுக்கு அவர்களின் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த நாள்பட்ட சிக்கல்கள் தீர்ந்து, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அத்துமீறி நுழைந்த பிச்சைக்காரன் – தனியாக மாட்டிக்கிட்ட அரசியை மீட்டு அட்வைஸ் செய்த குமாரவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
Recommended image2
மீனத்தில் உச்சம் பெறும் சுக்கிரன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்! மார்ச் 1 முதல் பணமழை தான்!
Recommended image3
மேட் ஃபார் ஈச் அதர்! இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கையே திருவிழாதான்: இதுல உங்க ஜோடி எந்த ராசின்னு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved