- Home
- Astrology
- Oct 22 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.!
Oct 22 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.!
Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 22, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் காண்பீர்கள். திட்டமிட்டபடி செயல்களை செய்து அனுகூலம் பெறுவீர்கள். இன்று உங்கள் மனதில் துணிச்சல், தைரியம் அதிகரிக்கும். பயணம் செல்வதற்கான சூழல் உருவாகும். பேசும்பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
இன்று பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். கடந்த காலம் செய்த முதலீடுகளில் இருந்து பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. பண நெருக்கடி குறைய ஆரம்பிக்கும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. பெரிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர், அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெற்று அதன் பின்னர் தொடங்குங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் குறித்த எதிர்கால திட்டங்களில் இருவரும் பேசி முடிவெடுப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அன்பு மற்றும் அரவணைப்பால் அனைவரையும் ஈர்ப்பீர்கள்.
பரிகாரங்கள்:
ராசிக்கு அதிபதியான சனீஸ்வர பகவானை வணங்கலாம். ஆஞ்சநேயரை வணங்குவது தைரியத்தை மேலும் அதிகரிக்கும். முன்னோர்கள் வழிபாடு பலன்களைத் தரும். ஆஞ்சநேயர் ஸ்தோத்திரங்கள் படிப்பதும், துளசி இலைகள் சமர்ப்பிப்பது காரியத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி, வெற்றி பெற உதவும். ஏழைகள், இயலாதவர்களுக்கு உதவி செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.