- Home
- Astrology
- Nov 05 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று உங்க கஷ்டங்கள் தீரும்.! நல்ல நேரம் ஆரம்பம் ஆகும்.!
Nov 05 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று உங்க கஷ்டங்கள் தீரும்.! நல்ல நேரம் ஆரம்பம் ஆகும்.!
Today Rasi Palan : நவம்பர் 05, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 05, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள் கூட பெரிய பலன்களைத் தரும். இன்று உணர்ச்சி பூர்வமான நாளாக இருக்கும். கடந்த கால கவலைகள் நீங்கி, மன அமைதி கிடைக்கும். சக ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை:
நிதி நிலைமை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிலுவையில் உள்ள கடன்களை அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் அல்லது எதிர்பாராத பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. வருமானம் பெருகும். சேமிப்பு மற்றும் முதலீடுகளில் சமநிலையை கடைபிடிப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவில் அன்பும், அன்னோன்யமும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வது உறவை பலப்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மூலம் நல்ல இடத்தில் திருமண வரன் தேடி வரலாம்.
பரிகாரங்கள்:
விநாயகரை வழிபடுவது தடைகளை நீக்கி வெற்றியைத் தரும். உங்கள் நிதி நிலைமை மேம்படுவதற்கு மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் அர்ப்பணித்து வழிபடலாம். வாரம் ஒருமுறை சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களை குறைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுவது, ஏழைகளுக்கு உதவுவது மன நிம்மதியை தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.