- Home
- Astrology
- Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Numerology : நியூமராலஜி படி, ஒருத்தரோட பிறந்த தேதி அவங்களுடைய குணம், அதிர்ஷ்டம், எதிர்காலத்தை தீர்மானிக்குமாம். சில குறிப்பிட்ட தேதிகள்ல பிறந்தவங்க இயல்பாகவே அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி கொண்டவங்களா இருப்பாங்களாம். அது எந்தெந்த தேதிகள்னு பார்ப்போமா?
15

Image Credit : stockPhoto
எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்?
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிறந்த தேதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு ஜோதிடமும், எண் கணிதமும் சொல்லுது. ஒருத்தரோட பிறந்த தேதி, நேரம், கிழமையை வெச்சு அவங்களோட குணம், அதிர்ஷ்டம், பண வரவு, எதிர்காலம் எல்லாத்தையும் கணிக்க முடியும்னு நிபுணர்கள் சொல்றாங்க. அதுலயும் சில தேதிகள்ல பிறந்தவங்க இயல்பாவே அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி கொண்டவங்களாம். அவங்க சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவாங்களாம். அது எந்தெந்த தேதிகள்னு பார்க்கலாம் வாங்க.
Add Asianetnews Tamil as a Preferred Source

25
Image Credit : stockPhoto
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்
எண் கணிதப்படி, எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள்ல பிறந்தவங்க சூரிய கிரகத்தோட ஆதிக்கத்துல இருப்பாங்க. இவங்களுக்கு இயல்பாகவே தலைமைப் பண்புகள் அதிகமா இருக்கும். எந்த வேலையை செஞ்சாலும் முன்னாடி நின்னு வழிநடத்துவாங்க. சமூகத்துல இவங்களுக்கு மரியாதை, அங்கீகாரம், புகழ் எல்லாம் சுலபமா கிடைக்கும். குறிப்பா, அரசு வேலை, தொழில், அரசியல் போன்ற துறைகள்ல சீக்கிரமா முன்னேறுவாங்க.
35
Image Credit : Getty
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள்
அதேபோல, எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகள்ல பிறந்தவங்க குரு கிரகத்தோட ஆதிக்கத்துல இருப்பாங்க. இவங்க தங்களோட புத்திசாலித்தனம், ஆன்மீக சிந்தனை, சரியான முடிவு எடுக்கும் திறனால வாழ்க்கையில முன்னேறுவாங்க. இவங்க குடும்பத்துக்கு பெருமை சேர்க்குறதோட, சமூகத்துலயும் ஒரு தனி இடத்தைப் பிடிப்பாங்க. பண விஷயத்துல இவங்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதுமே கைகொடுக்கும்.
45
Image Credit : Asianet News
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்
எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகள்ல பிறந்தவங்க புதன் கிரகத்தோட ஆதிக்கத்துல இருப்பாங்க. இவங்க தங்களோட சுறுசுறுப்பு, பேச்சாற்றல், வியாபாரத் திறமையால வாழ்க்கையில சீக்கிரமா வெற்றி பெறுவாங்க. புதுப்புது யோசனைகளையும், வாய்ப்புகளையும் சரியா பயன்படுத்திக்கிறதுல இவங்க கில்லாடி. சோஷியல் மீடியா, பிசினஸ், மார்க்கெட்டிங், கம்யூனிகேஷன் போன்ற துறைகள்ல இவங்க பெரிய உயரத்தை எட்டுவாங்க.
55
Image Credit : Getty
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள்
எண் கணிதப்படி, எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகள்ல பிறந்தவங்க ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம். இவங்களுக்கு ஆன்மீக சக்தி அதிகமா இருக்கும். வாழ்க்கையில இவங்க ரொம்ப சீக்கிரமா பெரிய நிலைக்கு வருவாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டங்கள் இருந்தாலும், போகப்போக நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்லும் யோகம், நல்ல வேலை, திடீர் பண வரவு போன்றவை இவங்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்குனு நிபுணர்கள் சொல்றாங்க.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos

