- Home
- Astrology
- 84 வருடங்களுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு 'ராஜயோகம்' ஆரம்பம்.!
84 வருடங்களுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு: ஜனவரி 17 முதல் இந்த ராசிகளுக்கு 'ராஜயோகம்' ஆரம்பம்.!
Navpancham Rajyog Lucky Zodiac Signs: 84 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17, 2026 அன்று நடக்கும் சூரியன் மற்றும் யுரேனஸின் அரிய சேர்க்கை சில ராசிகளின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Navpancham Rajyog Lucky Zodiac Signs
வேத ஜோதிடத்தின்படி, ஜனவரி 17 அன்று சூரியன்-யுரேனஸ் சேர்க்கையால் நவபஞ்சம யோகம் உருவாகிறது. 84 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த நிகழ்வு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டம் பெறவுள்ள ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு சூரியன்-யுரேனஸ் சேர்க்கை ஆற்றலையும், துணிவையும், புதிய உற்சாகத்தையும் தரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.
மகரம்
மகர ராசிக்கு நவபஞ்சம யோகம் அதிர்ஷ்ட கதவுகளைத் திறக்கும். திடீர் பண வரவால் நிதி நிலைமை மேம்படும். வேலை மாற்றத்திற்கு இது நல்ல நேரம். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில வேலை கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து அல்லது பழைய முதலீடுகளால் ஆதாயம் பெறலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு நவபஞ்சம ராஜயோகம் இலக்குகளை அடைய உதவும். நிதி நிலைமை வலுப்பெறும். முதலீடுகள் நல்ல பலனைத் தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்வில் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கம் மேலோங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

