- Home
- Astrology
- கும்ப ராசியில் அக்னி கிரகங்களின் ருத்ர தாண்டவம்.! நிலைகுலையப் போகும் 5 ராசிகள்.! பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கப் போறீங்க.!
கும்ப ராசியில் அக்னி கிரகங்களின் ருத்ர தாண்டவம்.! நிலைகுலையப் போகும் 5 ராசிகள்.! பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கப் போறீங்க.!
Angarak Yoga effects: 18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. ராகு-செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகத்தால் 5 ராசிகளுக்கு பண இழப்பு ஏற்படலாம்.

செவ்வாய் பெயர்ச்சி 2026
18 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணித்து வருகிறார். இந்த நிலையில் ராகுவுடன் செவ்வாய் சேர்வதால் அங்காரக யோகம் உருவாகிறது. இது 5 ராசிக்காரர்களுக்கு கடினமான காலத்தை கொண்டு வரலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாவது வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில், வேலையில் சிக்கல்கள் வரலாம். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். அவசர முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஏழாவது வீட்டிற்கு செவ்வாய் பிரவேசிக்கிறார். திடீர் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். இல்லையெனில் பெரிய நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். தொழில் துறையில் எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். இது பதற்றத்தை அதிகரிக்கும். ஆபத்தான முதலீடுகள் அல்லது முன்யோசனை இல்லலாமல் நடந்து கொள்வதை தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசியின் ஆறாவது வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நிதி சார்ந்த பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருக்கலாம். கடின உழைப்புக்கு பலன் கிடைக்காததால் மன அழுத்தம் அதிகரிக்கும். மரியாதை குறையலாம். எந்த முடிவையும் கவனமாக எடுக்கவும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் நிதி சவால்கள் ஏற்படலாம். இது பண இழப்புக்கு வழிவகுக்கும். குடும்ப விஷயங்களில் கவனமாக இருங்கள். பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
மீனம்
மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். நிதி விஷயங்களில் எச்சரிக்கை தேவை. ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். திடீர் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருக்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் தூக்கத்தைப் பாதிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

