MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மிதுன ராசியில் லட்சுமி நாராயண யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்ட காலங்கள் முடிவுக்கு வரப்போகுது.! இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்.!

மிதுன ராசியில் லட்சுமி நாராயண யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்ட காலங்கள் முடிவுக்கு வரப்போகுது.! இனி தொட்டதெல்லாம் வெற்றி தான்.!

Lakshmi Narayan Yog Lucky Zodiac Signs : சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் ‘லட்சுமி நாராயண யோகம்’ சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் வாரி வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 26 2026, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Lakshmi Narayan Yog Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Lakshmi Narayan Yog Lucky Zodiac Signs

ஜோதிடத்தில் கிரகங்களின் நகர்வால் அவ்வபோது ராஜயோகங்கள் உருவாகிறது. அந்த வகையில் மே 29ஆம் தேதி மங்களகரமான ‘லட்சுமி நாராயண யோகம்’ உருவாகிறது. செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் சுக்கிர பகவான் மே 14ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதைத் தொடர்ந்து மே 29ஆம் தேதி புதன் பகவானும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த இரு கிரகங்களின் இணைவால் ‘லட்சுமி நாராயண யோகம்’ உருவாகிறது. இந்த யோகம் பொன், பொருள், வசதிகள், ஆடம்பரம், வெற்றி ஆகியவற்றை சில ராசிகளுக்கு வழங்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

25
மிதுனம்
Image Credit : Gemini AI

மிதுனம்

லட்சுமி நாராயண யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெற உள்ளனர். இந்த யோகம் வாழ்வில் புது ஆற்றலை வழங்கும். நீண்ட காலமாக கிடப்பிலிருந்த பணிகள் முடியும். வீடு கட்டுதல், திருமணம் போன்றவற்றில் இருந்த தடைகள் அகலும். உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நினைத்த காரியங்களை முடித்து வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை பறிபோகும் நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் நிதிநிலை இந்த காலகட்டத்தில் கணிசமாக மேம்படும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

Related Articles

Related image1
Guru Peyarchi 2026 : குரு பெயர்ச்சியால் உருவாகும் ஹம்ஸ ராஜயோகம்.! அம்பானியாக மாறப்போகும் 6 ராசிகள்.! வாழ்வில் புதிய உச்சங்களை தொடப்போறீங்க.!
Related image2
மே மாதம் உருவாகும் கப்பார் யோகம்.! 3 ராசிகள் பெரிய ஆபத்தை சந்திக்கப் போறீங்க.! நஷ்டம் மேல் நஷ்டம் வரப்போகுது.!
35
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

கன்னி ராசியின் பத்தாம் வீட்டில் ‘லட்சுமி நாராயண யோகம்’ உருவாக இருக்கிறது. பத்தாம் வீடு ‘தொழில் ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் பாராட்டுக்களை குவிப்பீர்கள். வேலைக்காக வெளிநாடு செல்ல வாய்ப்புகளும் உருவாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலகட்டமாக இருக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை அல்லது பிற முதலீடுகள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

45
துலாம்
Image Credit : Gemini AI

துலாம்

துலாம் ராசியின் ஒன்பதாவது வீட்டில் ‘லட்சுமி நாராயண யோகம்’ உருவாக இருக்கிறது. இந்த வீடு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் துலாம் ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். ரியல் எஸ்டேட் அல்லது பிற முதலீடுகளில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள். தொழில் செய்து வருபவர்கள் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

55
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ‘லட்சுமி நாராயண யோகம்’ ஏழாம் வீட்டில் உருவாக இருக்கிறது. இந்த வீடு திருமண உறவுகள், கூட்டுத் தொழில்கள் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் உறவுகள் ரீதியாக சாதகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் அகலும். நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் கூட்டுத் தொழிலில் இந்த பிரச்சனைகள் சரியாகும். தொழிலதிபர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். நகை, சொத்துக்கள், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நட்சத்திரத்தை மாற்றும் சூரிய பகவான்: மே 11 வரை பொற்காலம்! சூரிய பகவானின் அருளால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள் இதோ!
Recommended image2
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான மே மாத ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!
Recommended image3
புதாதித்ய ராஜயோகம் 2026: மே முதல் கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்.. இனி பண மழை தான்!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026 : குரு பெயர்ச்சியால் உருவாகும் ஹம்ஸ ராஜயோகம்.! அம்பானியாக மாறப்போகும் 6 ராசிகள்.! வாழ்வில் புதிய உச்சங்களை தொடப்போறீங்க.!
Recommended image2
மே மாதம் உருவாகும் கப்பார் யோகம்.! 3 ராசிகள் பெரிய ஆபத்தை சந்திக்கப் போறீங்க.! நஷ்டம் மேல் நஷ்டம் வரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved