- Home
- Astrology
- Guru Peyarchi 2026 : குரு பெயர்ச்சியால் உருவாகும் ஹம்ஸ ராஜயோகம்.! அம்பானியாக மாறப்போகும் 6 ராசிகள்.! வாழ்வில் புதிய உச்சங்களை தொடப்போறீங்க.!
Guru Peyarchi 2026 : குரு பெயர்ச்சியால் உருவாகும் ஹம்ஸ ராஜயோகம்.! அம்பானியாக மாறப்போகும் 6 ராசிகள்.! வாழ்வில் புதிய உச்சங்களை தொடப்போறீங்க.!
Guru Peyarchi 2026 - Hamsa Rajyog Lucky Zodiac Signs : கடக ராசிக்குள் குரு பகவான் பெயர்ச்சி ஆகும்பொழுது ‘ஹம்ச ராஜயோகம்’ உருவாகிறது. இதன் காரணமாக ஆறு ராசிக்காரர்கள் வாழ்வில் புதிய உச்சங்களை தொட இருக்கின்றனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Guru Peyarchi 2026 - Hamsa Rajyog Lucky Zodiac Signs
ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஜூன் இரண்டாம் தேதி சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடக ராசி என்பது குரு பகவான் உச்சம் பெறும் ராசியாகும். இந்த ராசியில் அவர் அக்டோபர் 31ஆம் தேதி வரை வீற்றிருப்பார். குருவின் இந்த பெயர்ச்சியானது ஹம்ச ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறது. இது பஞ்ச மகா ராஜயோகங்களில் முக்கியமான யோகமாகும்.
ஹம்ச ராஜயோகம் 2026
ஒரு கிரகம் தனது உச்ச ராசியில் அமரும்பொழுது அது தனது முழு பலன்களையும் வெளிப்படுத்தும். குறிப்பாக சுப கிரகமான குரு பகவான் தனது உச்ச ராசியில் அமரும் பொழுது 12 ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களை ஏற்படுத்துவார். இருப்பினும் மிதுனம், கடகம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. ஹம்சராஜ யோகத்தால் பலன் பெற இருக்கும் ஆறு ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் குரு பகவான் பெயர்ச்சியாக இருக்கிறார். ஜோதிட ரீதியாக பார்க்கையில் இரண்டாம் வீட்டில் குரு பகவான் இருப்பது என்பது மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. தன ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால் மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். செல்வத்தின் அதிபதியான குரு பகவான், பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்குவார். நிதி வாய்ப்புகளை வாரி வழங்குவார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடும்.
கடகம்
தேவர்களின் அதிபதியாக விளங்கும் குரு பகவான் கடக ராசியின் லக்ன ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். கடக ராசியில் குரு உச்சம் பெறுவதன் காரணமாக கடக ராசிக்காரர்களின் மகத்தான நன்மைகளைப் பெற உள்ளனர். புதிய வெற்றிகள் குவியும். பொருளாதார நிலை பெறும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கையின் நிலவி வந்த போராட்டங்கள் முடிவு வரும். சவால்களைக் கடந்து வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் உட்பட பல விஷயங்களில் புதிய தொடக்கங்களை மேற்கொள்வீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
குரு பகவான் கடக ராசியில் பிரவேசிக்கும் காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் தீர்ந்து பொற்காலம் தொடங்கும் காலமாக இருக்கும். கன்னி ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. உச்ச வீட்டில் அமரும் குரு பகவானால் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானத்திற்கான வழிகள் திறக்கும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த மந்தம் விலகும். சுகபோகங்கள் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தடைக்கற்கள் அனைத்தும் நீங்கி, படிக்கற்களாக மாறும். சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். உங்கள் நடத்தையில் ஒரு வித முதிர்ச்சி காணப்படும். கம்பீரமாக செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியானது சுகபோகங்களை அளிக்க உள்ளது. விருச்சிக ராசியின் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடக்க இருக்கிறது. குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் நிலை பெறுவதால் விருச்சிக ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும். தடைபட்டு போன அல்லது சீர்குலைந்து நின்ற காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரி செய்யப்படும். வாகனம், நிலம் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டு. குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஏழாம் வீட்டில் நடைபெற இருக்கிறது. உச்சம் பெற்ற குரு பகவான் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்க உள்ளார். பொருளாதாரம் மேம்படுவதுடன் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் காணப்படும். நீண்ட காலமாக உங்களை துன்புறுத்தி வந்த துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் முடிவு பெறும். தேங்கி நின்ற காரியங்கள் அனைத்தும் நகரத் தொடங்கும். வெற்றியை நோக்கி நடைபோடுவீர்கள். உங்கள் பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். குடும்பத்தினருடன் இணைந்து செயல்களை தொடங்குவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. பழைய தொழிலை விரிவாக்கம் செய்து புதிய அத்தியாயத்தை தொடங்குவீர்கள். ஆன்மீகப் பயணம் அல்லது புனித யாத்திரை மேற்கொள்ளும் திட்டங்களும் உருவாகலாம்.
மீனம்
ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் உச்ச வீடான கடக ராசியில் பிரவேசிக்கும் பொழுது மீன ராசி காரர்கள் வலுவான ஆதாயங்களை பெறுவீர்கள். மீன ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் வழியாக குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். மேலும் மீன ராசியின் அதிபதியாகவும் குரு பகவான் விளங்கி வருவதால் சிறப்பான பலன்கள் கிடைக்க இருக்கிறது. அலுவலக வேலை பணிபுரிபவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சனி பகவானின் பாதகமான தாக்கங்களுக்கு மத்தியில் குருபகவான் உங்களுக்கு பெரும் நிம்மதியை அளிப்பார். உங்களுக்கு பிரச்சனை கொடுத்து வந்தவர்கள் வாழ்வில் இருந்து விலகுவார்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டும் சிறக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

