MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Kumba Rasi Palan Nov 20: கும்ப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் இணையும் சுப கிரகங்கள்.! இன்று பண வரவு கொட்டும்.!

Kumba Rasi Palan Nov 20: கும்ப ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் இணையும் சுப கிரகங்கள்.! இன்று பண வரவு கொட்டும்.!

Nov 20 Kumba Rasi Palan: நவம்பர் 20, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 19 2025, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 20, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : AI Generated

நவம்பர் 20, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் செயல்கள் அனைத்திலும் சற்று நிதானம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். வேலை அல்லது பணியிடத்தில் சிறிது அழுத்தம் ஏற்படலாம். இருப்பினும் சவால்களை திறம்பட முடிப்பீர்கள். 

புதிய திட்டங்கள் அல்லது யோசனைகள் மூலம் லாபம் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் குரு இருப்பதால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை.

நிதி நிலைமை:

புதன், சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்றைய தினம் பணப்புழக்கம் சீராக இருக்கும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். உடல்நலக் கோளாறுகளுக்காக செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று புதிய முதலீடுகளை தொடங்குவதற்கு நல்ல நாளாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வீட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் வார்த்தைகளில் நிதானமும், விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியம். செவ்வாயின் சஞ்சாரம் காரணமாக வாழ்க்கைத் துணையுடன் சற்று வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம்.

பரிகாரங்கள்:

மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுவது சவால்கள் மற்றும் எதிர்ப்புகளை சமாளிக்க உதவும். தடைகள் நீங்கவும், காரியங்களில் வெற்றி பெறவும் விநாயகப் பெருமானை வழிபடலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது உணவளிப்பது பலன்களைக் கூட்டும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: சனி பகவான் வீட்டிற்குள் நுழையும் சுக்கிரன்.! 2026 முதல் கோடிகளில் புரளப்போகும் ராசிகள்.!
Recommended image2
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பின் புதன்-செவ்வாய் உருவாக்கிய விபரீத ராஜயோகம்.! செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved