MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Weekly Rasipalan: மே 25 முதல் 31 வார ராசிபலன்! உங்களுக்கு குபேர யோகம் இருக்கா? 12 ராசிகளுக்கான பலன்கள்!

Weekly Rasipalan: மே 25 முதல் 31 வார ராசிபலன்! உங்களுக்கு குபேர யோகம் இருக்கா? 12 ராசிகளுக்கான பலன்கள்!

Kubera Yogam: குபேர யோகம் என்பது ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் சொகுசு வாழ்க்கையை வழங்கும் அதிர்ஷ்ட யோகமாகும். இந்த வாரத்தில் (மே 25 முதல் 31 வரை) 12 ராசிகளுக்கும் இந்த யோகத்தால் ஏற்படப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

4 Min read
Author : vinoth kumar
Published : May 23 2026, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
வார ராசிபலன்
Image Credit : Amazon

வார ராசிபலன்

குபேர யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருக்கு அசுர வேக பண வரவையும், சொத்து சேர்க்கையையும், வாழ்நாள் முழுமைக்கும் வறுமையற்ற சொகுசு வாழ்க்கையையும் வாரி வழங்கக்கூடிய மிக உன்னதமான அதிர்ஷ்ட யோகமாகும். இந்நிலையில் மே 25 முதல் 31 வரை 12 ராசிகளுக்கு எந்தெந்த மாதிரியான யோகத்தை கொடுக்கப்பபோகிறது என்பதை பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
213
மேஷம் - மங்களகரமான வாரத்தின் தொடக்கம்
Image Credit : Asianet News

மேஷம் - மங்களகரமான வாரத்தின் தொடக்கம்

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் தொட்டதெல்லாம் துலங்கும் ஒரு பொற்காலமாக அமையவுள்ளது. வாரத் தொடக்கத்திலேயே புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். திட்டங்களில் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணம், செல்வாக்கு மிக்க மனிதர்களின் உதவியால் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பெரிய வெற்றி கிட்டும். வேலை தேடுபவர்களுக்குக் கூடுதல் வருமானத்துடன் கூடிய நல்ல வேலை அமையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். காதல் துணையுடன் நெருக்கமும், திருமண வாழ்க்கையில் எல்லையற்ற மகிழ்ச்சியும் நிலைக்கும்.

Related Articles

Related image1
Guru Peyarchi 2026: கடக ராசிக்கு எப்போது முதல் யோக காலம் தொடங்குகிறது? இந்த நேரத்தில் கடக ராசியினர் செய்யக் கூடாத 5 தவறுகள்.!
Related image2
Vastu Tips: பணம் தண்ணீராக செலவாகிறதா? உங்கள் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் குழாய்களை உடனே செக் பண்ணுங்க!
313
ரிஷபம் - கலவையான பலன்கள்
Image Credit : Asianet News

ரிஷபம் - கலவையான பலன்கள்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் முற்பாதி அமோகமாகவும், பிற்பாதி சற்று சுமாராகவும் இருக்கும். பணியிடத்தில் உங்களது புத்திசாலித்தனத்தால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பரம்பரைச் சொத்து அல்லது நிலத் தகராறுகள் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக முடியும். வாரத்தின் இறுதி நாட்களில் வேலைச் சுமை திடீரென அதிகரிக்கும். சந்தையின் ஏற்ற இறக்கங்களால் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது உறவை மேலும் வலுவாக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

413
மிதுனம் - சவால்களும் விழிப்புணர்வும்
Image Credit : Asianet News

மிதுனம் - சவால்களும் விழிப்புணர்வும்

மிதுன ராசியினருக்கு இந்த வாரம் பொறுமையையும் விவேகத்தையும் சோதிக்கும் வாரமாக இருக்கும். வாரத் தொடக்கத்தில் பெரிய சவால்களால் செலவுகள் எகிறும். சேமிப்பைக் கரைக்க வேண்டிய சூழல் அல்லது கடன் வாங்கும் நிலை வரலாம். வியாபாரிகள் எவ்வித புதிய முதலீடுகளையும் இந்த வாரம் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கட்டுப்பாடு அவசியம். தகவல் தொடர்பு குறைபாட்டால் காதல் உறவில் விரிசல் வரலாம். ஆனால் வார இறுதியில் நண்பர்களின் உதவியால் கசப்புகள் நீங்கி இயல்பு நிலை திரும்பும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம்.

513
கடகம் - தைரியமும் அசுர வளர்ச்சியும்
Image Credit : Asianet News

கடகம் - தைரியமும் அசுர வளர்ச்சியும்

கடக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு இந்த வாரம் மிகவும் சாதகமான காலம். உத்தியோகம்: பணியிடத்தில் உங்களது தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். சவால்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். வேலை தேடி அலைந்த இளைஞர்களுக்கு நல்ல செய்தி வரும். வீட்டிற்கு அன்பான உறவினர்கள் வருவதால் மகிழ்ச்சி பெருகும். உடன்பிறந்தவர்களுடன் பாசம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இடையே பிணைப்பு பலப்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று தனிக்கவனம் செலுத்துங்கள்.

613
சிம்மம் - கௌரவமும் மாஸ் வெற்றிகளும்
Image Credit : Asianet News

சிம்மம் - கௌரவமும் மாஸ் வெற்றிகளும்

சிம்ம ராசியினருக்குப் புகழும், கௌரவமும் தேடி வரும் உன்னதமான வாரம் இது. உங்களது கடின உழைப்பிற்குச் சமூகத்திலோ அல்லது அலுவலகத்திலோ சிறப்புப் பாராட்டு அல்லது கௌரவம் கிடைக்கப் பெறலாம். லாபகரமான புதிய திட்டங்கள் கைகூடும். எதிர்பாராத பரிசுகளும், கூடுதல் வருமான வழிகளும் உண்டாகும். சொத்து சம்பந்தமான பெரிய பிரச்சினைகள் பெரியவர்களின் தலையீட்டால் தீரும். பிரிந்திருந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சிங்கிள்ஸாக இருப்பவர்களின் வாழ்வில் புதிய நபர் நுழைவார். மாமியார் வீட்டிலிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்.

713
கன்னி - நட்சத்திரங்கள் உச்சத்தில் இருக்கும் பொற்காலம்
Image Credit : Asianet News

கன்னி - நட்சத்திரங்கள் உச்சத்தில் இருக்கும் பொற்காலம்

கன்னி ராசிக்காரர்கள் தொடும் காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் அதிர்ஷ்ட வாரம் இது. நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த கடன்களை இந்த வாரம் முழுமையாகத் திருப்பிச் செலுத்தி நிம்மதி அடைவீர்கள். நிலுவையில் இருந்த அரசு வேலைகள் முடியும். இல்லத்தில் சுபகாரியங்கள் கூடி வரும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். புதிய வேலை மாற நினைப்பவர்களுக்கு வார இறுதியில் நல்ல சான்ஸ் அமையும். திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்விலும் பரஸ்பர அன்பும், அன்டர்ஸ்டாண்டிங்கும் உச்சத்தில் இருக்கும்.

813
துலாம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்
Image Credit : Asianet News

துலாம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்

துலாம் ராசியினர் இந்த வாரம் "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்ற பழமொழிக்கேற்ப கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சக்திக்கு மீறிய பொறுப்புகளைத் தலையில் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் அல்லது உங்களை விடப் பலசாலிகளுடன் தேவையற்ற ஈகோ மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிரிகள் சிறு தடைகளை ஏற்படுத்தலாம், அலட்சியப்படுத்துங்கள். வாரப் பிற்பாதியில் திடீர்ச் செலவுகளால் பட்ஜெட் மாறலாம். தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு. காதலில் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் அவப்பெயரைத் தரலாம். எனினும், உங்களது கடின காலங்களில் வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பக்கபலமாக நிற்பார்.

913
விருச்சிகம் - கோபத்தைக் குறைத்தால் வெற்றி நிச்சயம்
Image Credit : Asianet News

விருச்சிகம் - கோபத்தைக் குறைத்தால் வெற்றி நிச்சயம்

விருச்சிக ராசியினர் இந்த வாரம் தங்கள் நாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். கோபத்தில் பேசும் வார்த்தைகள் காரியத்தைக் கெடுக்கலாம், எனவே நிதானம் தேவை. அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் ஈகோ பார்க்காமல் இணக்கமாகச் செயல்படுங்கள். வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்குச் சிறு தடைகள் வரலாம். குழந்தைகள் வழியில் சில கவலைகள் தோன்றி மறையும். காதலில் சின்னச் சின்ன ஊடல்கள் வந்து போகும். கணவன்-மனைவி இடையே உள்ள தவறான புரிதல்களைப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.

1013
தனுசு - முற்பாதியில் ஜாக்பாட் லாபம்
Image Credit : Asianet News

தனுசு - முற்பாதியில் ஜாக்பாட் லாபம்

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் முதல் பாதி அசுர வேக பலன்களைத் தரும். தொழில் நிமித்தமான பயணங்கள் பெரும் லாபத்தைத் தரும். பெரிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உங்களுக்குப் பேருதவியாக இருப்பார்கள். வார மத்தியில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வாரத்தின் இறுதி நாட்களில் குழந்தைகளுக்குப் பணத்தை அதிகமாகச் செலவழிக்க நேரிடலாம். புதிய ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. காதல் துணையுடனான பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுவீர்கள்.

1113
மகரம் - தன்னம்பிக்கை உயரும் வாரம்
Image Credit : Asianet News

மகரம் - தன்னம்பிக்கை உயரும் வாரம்

கடந்த வார சோதனைகள் நீங்கி, மகர ராசியினருக்கு இந்த வாரம் மங்களகரமாக விடியப் போகிறது. அனைத்து வேலைகளும் நினைத்தபடி முடிவதால் அசாத்திய தன்னம்பிக்கை பிறக்கும். நீண்ட கால நிதி நெருக்கடிகளில் இருந்து முழுமையாக விடுதலைக் கிடைக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்கள் வெற்றியைத் தரும். வேலை நிமித்தமாகப் புதிய பயணங்கள் செய்ய நேரிடலாம். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த வாரம் நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் காதலைத் துணியிடம் வெளிப்படுத்த இதுவே சரியான நேரம், சம்மதம் கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

1213
கும்பம் - அதிக உழைப்பும் அலைச்சலும்
Image Credit : Asianet News

கும்பம் - அதிக உழைப்பும் அலைச்சலும்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் சற்று ஓட்டமும் நடையுமாகப் பரபரப்பாகக் கழியும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் வேலைச் சுமையால் அசதி உண்டாகும். சக ஊழியர்களிடம் சண்டையிடாமல் அமைதி காக்கவும். வார மத்தியில் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது இல்லத்தரசிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் நல்லது. வியாபாரத்தில் புதிய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது மிகுந்த கவனம் தேவை, சிறு விபத்துகள் நேரலாம். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலை கவலை தரலாம். கடினமான சூழலில் உங்களது காதல் துணை உங்களுக்கு நல்வழி காட்டுவார்.

1313
மீனம் - பொறுமையும் நிதானமும் தேவை
Image Credit : Asianet News

மீனம் - பொறுமையும் நிதானமும் தேவை

மீன ராசியினர் இந்த வாரம் உணர்ச்சிவசப்படாமல் எதையும் நிதானமாக அணுக வேண்டும். குடும்பப் பிரச்சினைகளை அலுவலகத்திற்கும், அலுவலகப் பிரச்சினைகளை வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டாம். அது இரண்டு இடத்திலுமே நிம்மதியைக் கெடுக்கும். நிலம், சொத்து தொடர்பான விஷயங்களில் இந்த வாரம் இறுதி முடிவு எடுக்க வேண்டாம். பழைய நோய்கள் அல்லது பருவகால நோய்களால் உடல் உபாதைகள் வரலாம். சிறு வலியாக இருந்தாலும் மருத்துவரை அணுகுங்கள். சந்தை மந்தநிலை மற்றும் போட்டியாளர்களின் நெருக்கடியால் வியாபாரிகளுக்குச் சற்று கவலை கூடும். அகந்தையை (Ego) மூட்டை கட்டி வைத்துவிட்டு, காதல் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தால் மட்டுமே உறவைச் சீராகக் கொண்டு செல்ல முடியும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image2
Water Bottle Vastu: ஃபிரிட்ஜ்ல பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி வைக்கிறீங்களா? வாஸ்து என்ன சொல்லுது?
Recommended image3
Guru Peyarchi 2026: கடக ராசிக்கு எப்போது முதல் யோக காலம் தொடங்குகிறது? இந்த நேரத்தில் கடக ராசியினர் செய்யக் கூடாத 5 தவறுகள்.!
Related Stories
Recommended image1
Guru Peyarchi 2026: கடக ராசிக்கு எப்போது முதல் யோக காலம் தொடங்குகிறது? இந்த நேரத்தில் கடக ராசியினர் செய்யக் கூடாத 5 தவறுகள்.!
Recommended image2
Vastu Tips: பணம் தண்ணீராக செலவாகிறதா? உங்கள் வீட்டு சமையலறை மற்றும் பாத்ரூம் குழாய்களை உடனே செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved