MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Astrology
  • Arrogant Zodiac Signs: அதிக ஆணவப் போக்கு கொண்ட 6 ஆண் ராசிகள் யார் தெரியுமா?

Arrogant Zodiac Signs: அதிக ஆணவப் போக்கு கொண்ட 6 ஆண் ராசிகள் யார் தெரியுமா?

சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தலைமைப் பண்பு, அதிகார உணர்வு மற்றும் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் முடிவில் உறுதியாக நிற்கும் குணம், பிறரின் பார்வையில் ஆணவமாகத் தோன்றும் சூழலையும் உருவாக்கலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : Sep 15 2026, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ஆவண போக்குடைய ஆண் ராசிகள் :
Image Credit : AI Generated

ஆவண போக்குடைய ஆண் ராசிகள் :

மனிதர்களின் குணநலன்களையும் ஆளுமையையும் தீர்மானிப்பதில் ஜோதிட சாஸ்திரத்திற்கு முக்கியப் பங்குண்டு. நவகிரகங்களின் சேர்க்கையும், ராசிகளின் தன்மையும் தான் ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை தீர்மானிக்கின்றன. ஆனால், சில ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு இந்தத் தன்னம்பிக்கை சற்று எல்லை மீறி, சுயமரியாதையாகவும் சில நேரங்களில் தலைக்கணமாகவும் மாறும் இயல்புடையது. தங்களின் கருத்தே இறுதியானது என்றும், தங்களை விட யாரும் உயர்ந்து விடக் கூடாது என்றும் நினைக்கும் அந்த அதிக ஆணவம் கொண்ட 6 ஆண் ராசிகளைப் பற்றியும், அவர்களின் மனோபாவத்தை கையாளுவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
சிம்மம்:
Image Credit : Asianet News

சிம்மம்:

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி ஆண்கள், பிறவியிலேயே தங்களை ஒரு ராஜாவாகவே பாவித்துக் கொள்பவர்கள். பிறரின் பாராட்டுக்கும் கவனத்திற்கும் எப்போதும் இயங்கும் இவர்கள், தங்களின் முடிவுகளை யாராவது எதிர்த்தால் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.இவர்களது ஆணவத்தைக் கட்டுப்படுத்த விமர்சிப்பதைத் தவிர்த்து, இவர்களது திறமைகளை அங்கீகரித்து நேர்மறையாகப் பேசுவதே சிறந்த வழியாகும்.

Related Articles

Related image1
Dictatorial Zodiac: சர்வாதிகார குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான்
Related image2
Laziest Zodiac: Basically சோம்பேறி ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
37
மேஷம் :
Image Credit : ChatGPT

மேஷம் :

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசி ஆண்கள், அவசர குணமும் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் தீவிரமும் கொண்டவர்கள். "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்" என்ற பிடிவாத குணமே இவர்களது ஆணவத்தின் மூல காரணமாக அமைகிறது. இவர்களிடம் விவாதித்து ஜெயிக்க முடியாது. அமைதியாக இருந்து, காரியத்தைச் சாதித்துக் கொள்வதே இவர்களுடன் பழகும் போது நல்லது.

47
விருச்சிகம் :
Image Credit : Asianet News

விருச்சிகம் :

செவ்வாய் மற்றும் கேதுவின் தாக்கத்தைப் பெற்ற விருச்சிக ராசி ஆண்கள், அமைதியாகத் தெரிந்தாலும் மனதிற்குள் பெரும் ஆதிக்க உணர்வைக் கொண்டிருப்பார்கள். தங்களின் ரகசியங்களை வெளியில் சொல்லாத இவர்கள், பிறரைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே விரும்புவார்கள். இவர்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வது இவர்களது ஆதிக்க மனப்பான்மையைக் குறைத்து நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

57
மகரம் :
Image Credit : ChatGPT

மகரம் :

சனியின் ஆதிக்கத்தில் வரும் மகர ராசி ஆண்கள், நடைமுறை சாத்தியங்களை மட்டுமே நம்புபவர்கள். தங்களின் உழைப்பாலும் அனுபவத்தாலும் பெற்ற அறிவை வைத்து, மற்றவர்களைத் தங்களை விடக் குறைவாக மதிப்பிடும் ஒருவித இயல்பான தற்செருக்கு இவர்களிடம் இருக்கும். இவர்களது அனுபவத்தை மதித்து நடந்து கொண்டால், தங்களின் கடினமான ஆணவப் போக்கைத் தளர்த்தி அன்பாக மாறுவார்கள்.

67
தனுசு :
Image Credit : Asianet News

தனுசு :

குருவின் அருள்பெற்ற தனுசு ராசி ஆண்கள், தங்களுக்குத்தான் உலகத்தின் அனைத்து விஷயங்களும் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்காமல், தங்களின் தத்துவங்களை மட்டுமே பிறர் மீது திணிக்கும் குணம் இவர்களிடம் காணப்படும். இவர்களது அறிவாற்றலை ஏற்றுக் கொள்வது போலக் காட்டி, மெதுவாக மாற்றுக்கருத்தை எடுத்துக்கூறுவது பலன் தரும்.

77
மிதுனம் :
Image Credit : Asianet News

மிதுனம் :

புதனின் பார்வையைப் பெற்ற மிதுன ராசி ஆண்கள், தங்களின் பேச்சாற்றலால் எவரையும் வீழ்த்தி விடலாம் என்ற கர்வத்தைக் கொண்டிருப்பார்கள். விவாதங்களில் தங்களின் பக்க நியாயத்தை மட்டுமே நிறுவுவதில் தீவிரமாக இருப்பார்கள். இவர்களது விவாதங்களுக்கு உடனடிப் பதில் அளிக்காமல், அமைதி காப்பதே இவர்களது பேச்சைக் கட்டுப்படுத்தும் சிறந்த உத்தியாகும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gajakesari Yoga 2026: கஜகேசரி யோகம் முதல் தன யோகம் வரை; இந்த 6 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமாம்
Recommended image2
Vakra Maha Yoga : சுக்கிரன்-புதன் வக்கிர சங்கமத்தால் உருவாகும் வக்கிர மகா யோகம்! டாப் லெவலுக்கு செல்லும் 4 ராசிகள்!
Recommended image3
Saturn Aspect: சனியின் பார்வை மாறுது.. பணம் சேர்வதை யாராலும் தடுக்க முடியாது! ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்!
Related Stories
Recommended image1
Dictatorial Zodiac: சர்வாதிகார குணம் கொண்ட 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான்
Recommended image2
Laziest Zodiac: Basically சோம்பேறி ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved