- Home
- Astrology
- Kitchen Vastu: மறந்து கூட வீட்டில் குப்பை தொட்டியை இந்த இடத்தில் வைக்காதீங்க.! கஷ்டம் வருமாம்.!
Kitchen Vastu: மறந்து கூட வீட்டில் குப்பை தொட்டியை இந்த இடத்தில் வைக்காதீங்க.! கஷ்டம் வருமாம்.!
வாஸ்து சாஸ்திரத்தின் படி குப்பைத் தொட்டியை சில இடங்களில் வைக்கக்கூடாது. அது வீட்டின் ஆற்றல் ஓட்டத்தை பாதிக்கும் என கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி குப்பைத்தொட்டியை எங்கு வைக்க வேண்டும்? எங்கு வைக்க கூடாது? என்பது குறித்து பார்க்கலாம்.

வடகிழக்கு மூலையில் வைக்கக்கூடாது
வடகிழக்கு மூலை என்பது வாஸ்து சாஸ்திரத்தில் ஈசானிய மூலை என்று கருதப்படுகிறது. இது புனிதமான திசையாகும். வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் நுழையும் இடமாக ஈசானிய மூலை கருதப்படுகிறது. இந்த திசையில் குப்பைத்தொட்டியை வைப்பது நேர்மறை ஆற்றல் வருவதை தவிர்க்கலாம். எனவே வடகிழக்கு திசையில் குப்பைத்தொட்டியை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இந்த இரண்டு திசைகளில் வைக்கலாம்
குப்பைத்தொட்டியை வைப்பதற்கு வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசைகள் பொருத்தமாகக் கருதப்படுகின்றன. வடமேற்கு திசை - வாயு மூலை என்றும், தென்கிழக்கு திசை - அக்னி மூலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடங்கள் வீட்டின் ஆற்றல் சமநிலையை பாதிக்காமல் குப்பைகளை நிர்வகிக்க உதவும்.
வீட்டிற்கு வெளியில் வைக்கலாம்
முடிந்தால் குப்பை தொட்டியை வீட்டிற்கு வெளியே, திறந்த வெளி அல்லது மூடப்பட்ட முற்றத்தில் வைப்பது சிறந்தது. இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் பரவுவதை தவிர்க்கும். வீட்டின் உட்புறத்தில் வைக்க வேண்டியிருந்தால் சமையல் அறையில் மூடி போட்ட குப்பை தொட்டியை பயன்படுத்தி மேற்குறிப்பிடப்பட்ட திசைகளில் வைக்க வேண்டும்.
வைக்கக்கூடாத பிற பகுதிகள்
வீட்டின் மையப்பகுதி ‘பிரம்மஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் ஆன்மீகம் மற்றும் சமநிலைக்கு முக்கியமானது. இந்த இடத்தில் குப்பைத் தொட்டியை வைப்பது வாஸ்துபடி தவறானது. முக்கிய நுழைவு வாயில்கள், கதவுகள், ஜன்னல்களுக்கு அருகில் குப்பை தொட்டியை வைப்பது எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வரலாம். எனவே இந்த பகுதிகளையும் தவிர்த்து விடுங்கள்.
மூடி வைக்காவிட்டால் லட்சுமி தேவி வரமாட்டார்
முடிந்த அளவிற்கு சமையலறையிலும் குப்பை தொட்டியை வைப்பதை தவிர்த்து விடலாம். ஒருவேளை தவிர்க்க முடியாதவர்கள் அதை சரியான சரியாக மூடி வைக்க வேண்டும். குப்பை தொட்டி திறந்திருந்தால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வரமாட்டார். இதன் காரணமாக பொருளாதார இழப்பு, செலவுகள் அதிகரிப்பு, வருமான குறைவு போன்றவை ஏற்படலாம். எனவே சுத்தமான குப்பை தொட்டியை பயன்படுத்தி அதற்கு மூடி போட வேண்டும்.
தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
குப்பை தொட்டிகளை அதை அடிக்கடி காலி செய்து, தினமும் சுத்தம் செய்வது அவசியம். இது வாஸ்து ஆற்றலை மேம்படுத்துவதோடு, வீட்டின் ஆற்றலையும் மேம்படுத்தும். வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றில் வருவதை உறுதி செய்யும். வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஏற்ப வீட்டில் நேர்மறை ஆற்றலை பராமரிக்கலாம்.