- Home
- Astrology
- 18 ஆண்டுகளுக்கு பின் மகத்தில் கேது.. இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை பொழியும்!
18 ஆண்டுகளுக்கு பின் மகத்தில் கேது.. இந்த 3 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்.. பணமழை பொழியும்!
Ketu Transit 2026: கேது நட்சத்திர பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப்போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கேது நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் அடிக்கடி பெயர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதுவும் பொதுவாக எதிர்மறையான பலங்களை கொடுக்கும் தீய கிரகமாக கருதப்படும் கேது போன்ற கிரகங்களின் இயக்கம் மிகவும் கவனித்தக்க அம்சமாகும். கேது பொதுவாக தீயகிரகமாக கருதப்பட்டாலும் சரியான இடத்தில் அமர்ந்தால் அற்புதமான பலன்கள் கொடுக்கும்.
அந்த வகையில் கேது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனது நட்சத்திரத்தை மாற்றி உள்ளது. அதாவது ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கேது முகம் நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து நவம்பர் 25ஆம் தேதி வரை அங்கேயே தங்க போகிறது. இந்த பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். தொழில் செய்வதற்கு இது ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும். அனைத்து வகைகளிலும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த குடும்ப அல்லது பரம்பரை சொத்துகள் கைக்கு கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்கள் ஆடைகள் வந்து குவியும். ஒட்டுமொத்தத்தில் கேதுவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும்.
கடகம்
கேதுவின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கும் பெரும் மாற்றத்தை கொண்டு வரப் போகிறது. தொழில் புரிபவர்கள் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெற்று பல்வேறு முதலீடுகள் மூலம் பெரும் வருமானங்களை ஈட்ட முடியும். குடும்பத்தில் மோதல் நீங்கி உற்சாகம் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அகலும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். மிக முக்கியமாக உடல்நல பிரச்சினைகள் முழுமையாக நீங்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
கும்பம்
கேதுவின் பெயர்ச்சி கடந்த கால பாதிப்பவர்களில் இருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் ஆறுதலை கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அவர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க நல்ல ஒரு வாய்ப்பு கனிந்துள்ளது. சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் புதிய சொத்துக்கள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான சிறந்த காலகட்டம் இது. திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள் சமூகமாக முடிவுக்கு வரும்.
விநாயகனை வழிபடுங்கள்
கேது பகவான் பொதுவாக ஞானத்தையும், மோட்சத்தையும் தருபவர். இந்த அதிர்ஷ்டக் காலத்தில் தான தர்மங்களைச் செய்து விநாயகப் பெருமானை வழிபடுங்கள். உங்களுக்கான பலன்கள் இன்னும் 4 மடங்கு அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

