- Home
- Astrology
- குருவை நேருக்கு நேர் சந்திக்கும் செவ்வாய்.! உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! 4 ராசிக்காரர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வரப்போகுது.!
குருவை நேருக்கு நேர் சந்திக்கும் செவ்வாய்.! உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! 4 ராசிக்காரர்கள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வரப்போகுது.!
Kendra Drishti Yoga 2026 Lucky Zodiac Signs : விரைவில் குரு மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் இணைந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்க இருக்கின்றனர். இந்த யோகத்தால் பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Kendra Drishti Yoga 2026 Lucky Zodiac Signs
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு கிரகங்கள் நகரும் பொழுது அவை பிறகிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களுடன் குறிப்பிட்ட தொலைவில் அமைந்தோ சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மே 5 செவ்வாய் மற்றும் குரு பகவான் ஆகிய இருவரும் 90 டிகிரி கோணத்தில் இணைகின்றனர்.
இதையும் படியுங்கள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/desa-mangayarkarasi-explains-the-right-age-to-write-horoscope-for-children-and-when-to-start-reading-predictions-8vmwutw
குரு செவ்வாய் உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகம்
இந்த இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இணைவதால் கேந்திர திருஷ்டி யோகம் உருவாகிறது. இது ஜோதிடத்தில் அரிய சேர்க்கையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் உருவாகிறது. குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் கேந்திர திருஷ்டி யோகத்தால் அதிகபட்ச நன்மைகளை பெற உள்ளனர். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
இதையும் படியுங்கள்: https://tamil.asianetnews.com/gallery/spiritual/should-women-wear-flowers-after-the-death-of-their-husbands-desa-mangayarkarasi-explained-tflgdk1
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகம் சுப பலன்களை வழங்க இருக்கிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மே 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் புதிய உச்சங்களை அடையலாம்.
குறிப்பாக தொழிலதிபர்கள் நிதி ரீதியான நன்மைகளைப் பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறையும். மாணவர்களுக்கு கல்வியில் புகழ் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வரன் தேடி வரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திருஷ்டி யோகம் சாதகமான பலன்களை தர உள்ளது. இந்த யோகம் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரும். தனிப்பட்ட உறவுகளில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.
தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களின் ஆற்றல் புதிய உச்சத்தை அடையும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
குரு-செவ்வாய் இணைந்து உருவாக்கும் கேந்திர திருஷ்டி யோகத்தால் விருச்சக ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியான நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் இருந்து வந்த அரசியல்கள் முடிவுக்கு வரும். பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். நீண்ட காலமாக சிக்கி இருந்த பணம் மீண்டும் கைக்கு வரும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான ஒரு தருணங்கள் உண்டாகும். பொருளாதார ரீதியாக மேம்படுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான காலக்கட்டத்தை அனுபவிப்பீர்கள். குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தகராறுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் முடிவுக்கு வந்து பணம் கைக்கு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திர திஷ்டி யோகம் சிறப்பான பலன்களை அளிக்க உள்ளது. புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்கள் நிறைவான ஊதியத்தில் நல்ல வேலைகளைப் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். அரசு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
சமூகத்தில் அந்தஸ்து உயரும். வேலை தேடி வருபவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும். புதிய வாகனம், சொத்துக்கள் சேர்க்கை நடைபெறும். நகை, ஆபரணங்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். கடந்த காலத்தில் உங்களை வாட்டி வதைத்து வந்த நோய்களிலிருந்து விரைவாக மீண்டு வருவீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

