- Home
- Astrology
- Karthigai Matha Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த கார்த்திகை மாதத்தில் நீங்கள் எதை தொட்டாலும் வெற்றி பெறுவீர்கள்.!
Karthigai Matha Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த கார்த்திகை மாதத்தில் நீங்கள் எதை தொட்டாலும் வெற்றி பெறுவீர்கள்.!
karthigai matha rasi palan 2025 for thulam rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
கார்த்திகை மாதம் 2025 - துலாம் ராசி பலன்கள்
கார்த்திகை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய திருப்பங்களையும், நல்ல முன்னேற்றங்களையும் கொடுக்கக்கூடிய அற்புதமான மாதமாக அமையும்.
கிரக நிலைகள்:
- ராசிநாதன் சுக்கிரன் மாதத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். இது பலம் வாய்ந்த நிலையாகும்.
- மாத தொடக்கத்தில் சுக்கிரனுடன் புதன் இணைந்து புத சுக்ர யோகம் உருவாவதால் பொருளாதார நிலை சிறக்கும்.
- குரு பகவானின் பார்வை நல்ல பலன்களைக் கொடுக்கும்.
- கார்த்திகை 20 ஆம் தேதி நடைபெற உள்ள செவ்வாய் பெயர்ச்சி காரணமாக துணிச்சலும், தன்னம்பிக்கையும் உயரும்.
பொதுவான பலன்கள்:
- இந்த மாதம் உங்களுக்கு மகிழ்ச்சிகளையும், சிறப்பான தருணங்களையும், புதுமையான விஷயங்களையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி நிச்சயம்.
- குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று, உறவுகள் சீராகும்.
- புதிய தொழில் தொடங்குவது குறித்து சிந்திப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமை:
- இந்த மாதம் பண வரவு அபரிமிதமாக இருக்கும். ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து சேரும். தன ஸ்தானத்தில் கிரகங்களின் சஞ்சாரம் வலுப்பெறுவதால் பொருளாதார பற்றாக்குறை அகலும்.
- தொழிலில் வரவேண்டிய தொகைகள் கைக்கு வந்து சேரும்.
- பூர்வீக சொத்துக்கள் மூலம் நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் அளவிற்கு சூழல் உருவாகும்.
வேலை மற்றும் தொழில்:
- உத்தியோகத்தில் இருந்த தடைகள் அல்லது சிக்கல்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணி புரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
- வேலையை மாற்றும் எண்ணம் இருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
- சிலருக்கு வெளிநாட்டு அழைப்புகள் அல்லது எதிர்பாராத பணி மாறுதல்கள் கிடைக்கலாம்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் பெறுவீர்கள்.
- புதிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
- குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை இருக்கும். ஆனால் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை.
- கோபத்தை குறைப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறைய வாய்ப்பு உள்ளது.
- குழந்தைகளிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும். கு
- ழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெற வாய்ப்பு உள்ளது.
- வீட்டில் சுப காரியங்கள் குறித்த பேச்சுக்கள் முடிவுக்கு வரலாம்.
ஆரோக்கியம் மற்றும் கல்வி:
- ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த மாதம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு முன் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான அறிகுறிகள் தென்படும்.
- கண் சார்ந்த பிரச்சனைகள், பல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வரலாம்.
- சுக்கிரன் பலமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் வராது. இருப்பினும் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
- மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான மாதமாக அமையும்.
- உயர்கல்வி குறித்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரங்கள்:
- கார்த்திகை மாதம் ஐயப்பனை வழிபடுவது சகல நன்மைகளைத் தரும்.
- சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள்.
- துணிவு, தன்னம்பிக்கை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
- இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos