MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Karthigai Matha Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! எச்சரிக்கையா இருங்க.!

Karthigai Matha Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! எச்சரிக்கையா இருங்க.!

Karthigai Matha Rasi Palan for Dhanusu rasi: இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17, 2025 அன்று பிறக்க உள்ளது. கார்த்திகை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Nov 17 2025, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கார்த்திகை மாதம் 2025   தனுசு ராசி பலன்கள்
Image Credit : Asianet News

கார்த்திகை மாதம் 2025 - தனுசு ராசி பலன்கள்

கார்த்திகை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு சவால்களையும், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் கலந்து கொடுக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதம் கடின உழைப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

கிரக நிலைகள்:

  • இந்த மாதம் சனிபகவான் தனுசு ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 
  • குரு பகவான் ஏழாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். 
  • சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோர் மாத தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர்.

பொதுவான பலன்கள்:

  • சனி பகவானின் சஞ்சாரம் காரணமாக மனதில் ஒருவித சோர்வு நீடிக்கலாம். எளிதாக செய்யக்கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றக் கூடும். 
  • மாதத்தின் இரண்டாம் பகுதியில் குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு உங்கள் முயற்சிகள் கைகூடும். புதிய வாய்ப்புகள் உருவாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். 
  • நண்பர்கள் போல பழகும் சிலரே உங்களுக்கு துரோகம் செய்யலாம். எனவே யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது கூடாது.

நிதி நிலைமை:

  • மாதத்தின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. விரய ஸ்தானத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் வீண் விரயங்கள் அல்லது எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். 
  • நிதி திட்டமிடல் அவசியம். சனி மற்றும் குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு நிலைமை மாறலாம். குருவின் அருளால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
  • நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பணம் கிடைப்பதற்கான வழிகள் பிறக்கும். 
  • முதலீடுகள் குறித்து நிதானமாக முடிவு எடுப்பது நல்லது.

வேலை மற்றும் தொழில்:

  • வேலை சம்பந்தமாக நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 
  • கடின உழைப்பை தொடர வேண்டியது அவசியம். தொழில் மற்றும் வணிகம் செய்து வருபவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சிறப்பாக இருக்கும். 
  • குருவின் நிலை மாற்றத்திற்கு பிறகு தொழிலில் வளர்ச்சி ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் முன்னேற்றத்தை அடைவீர்கள்.

குடும்ப உறவுகள்:

  • குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை ஏற்படும். ஒருவருக்கொருவர் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். 
  • குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். காதல் உறவுகளின் அடிப்படையில் இந்த மாதம் சராசரியாக இருக்கும். 
  • சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். துணிச்சலுடன் எதிர்கொண்டால் உறவை கையாள முடியும். 
  • திருமணமானவர்களுக்கு மாதத்தின் ஆரம்பம் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் மாதத்தின் இரண்டாம் பகுதி ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும்.

ஆரோக்கியம் மற்றும் கல்வி:

  • ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 
  • சிறிய உபாதைகளையும் அலட்சியம் செய்ய வேண்டாம். சனி பகவானின் நிலை காரணமாக மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகியவை ஏற்படலாம். 
  • மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
  •  புதன் பகவானின் பார்வை காரணமாக கல்வித்துறையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். தேர்வுகளில் சிறந்த முடிவுகள் கிடைக்கும்.

பரிகாரங்கள்:

  • தனுசு ராசிக்கு அதிபதியான குரு பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது. 
  • கோவிலுக்கு சென்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சமர்ப்பித்து, கொண்டைக்கடலை தானம் செய்யலாம். 
  • சனியின் தாக்கம் இருப்பதால் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவது, சனீஸ்வர பகவான் சன்னதியில் எள் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும். 
  • குலதெய்வ வழிபாடு மூலம் தடைகள் விலகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(39.4 ov)184/9
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
Karthigai Matha Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, சுக்கிரனின் அருளால் கிடைக்கும் அதிர்ஷ்டம்.! வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடும்.!
Recommended image2
Karthigai Matha Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த கார்த்திகை மாதத்தில் நீங்கள் எதை தொட்டாலும் வெற்றி பெறுவீர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved