ராகு கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்.! 6 ராசிகள் வாழ்வில் இனி சரவெடி தான்.!
கால சர்ப்ப யோகம் இந்த மாதம் 23 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை கிரகங்களின் சஞ்சாரத்தின் போது உருவாகிறது. ராகு மற்றும் கேது இடையே அனைத்து கிரகங்களும் பயணிக்கும் போது கால சர்ப்ப யோகம் உருவாகிறது.

மேஷம்
இந்த ராசியின் ஐந்தாம் வீட்டில் ராகு, கேது இருப்பதால் கால சர்ப்ப யோகம் உண்டாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வருமானம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் கணிசமாக குறையும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
மிதுனம்
இந்த ராசிக்கு 3, 9-ம் வீடுகளில் காலசர்ப்ப யோகம் இருப்பதால் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல நிலை ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். திடீர் செல்வம் வர வாய்ப்புள்ளது.
சிம்மம்
இந்த ராசிக்கு 7-ம் வீட்டில் கேது, ராகு சஞ்சாரத்தால் கால சர்ப்ப யோகம் உள்ளது. வேலையில் பதவி உயர்வு, முக்கியத்துவம், செல்வாக்கு உண்டாகும். வருமானம், ஆரோக்கியத்தில் குறைவிருக்காது. வர வேண்டிய பணம் முழுமையாக வந்து சேரும். நிதி பரிவர்த்தனைகள், பங்குகள் லாபகரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்த ராகு கேது யோகம் இருப்பதால், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி பெறும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பங்குகள் மற்றும் வணிகம் லாபகரமாக இருக்கும். காதல் விவகாரங்கள் சுமூகமாக செல்லும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும்.
தனுசு
தனுசு ராசிக்கு 3, 9-ம் வீடுகளில் கால சர்ப்ப யோகம் இருப்பதால் சொத்துத் தகராறுகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் சொத்துக்கள் வந்து சேரும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். நிதி, தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சனைகள் பெருமளவில் தீரும். அனைத்து முயற்சிகளும் நிறைவேறும்.
மகரம்
இந்த ராசிக்கு 2, 8-ம் வீடுகளில் கால சர்ப்ப யோகம் இருப்பதால், திடீர் பண ஆதாயம், பரம்பரை சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. வர வேண்டிய பணம் வந்து சேரும். சம்பளம், வருமானம் உயரும். குடும்பத்தில் ஒருவர் நல்ல வளர்ச்சியை அடைவார். ஆரோக்கியம் பெருமளவு மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

