- Home
- Astrology
- சனி பகவான் பிடியில் ராகு.! அடுத்த 10 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
சனி பகவான் பிடியில் ராகு.! அடுத்த 10 மாதங்களுக்கு ராஜ வாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்.!
Rahu Ketu Transit 2026 : ஜோதிடத்தின்படி, ராகு பகவான் சனி பகவானின் ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் செல்வ செழிப்பை பெற இருக்கிறார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ராகு பெயர்ச்சி 2026
ஜோதிடப்படி, ராகு பகவான் மே 18, 2025-ல் கும்ப ராசியில் சஞ்சரித்து, டிசம்பர் 5, 2026 வரை இருப்பார். 2026-ல் அவர் மகர ராசிக்கு பெயர்ச்சியடைய இருக்கிறார். மகர ராசி சனி பகவான் ஆளும் ராசியாகும். இதன் காரணமாக பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இங்கே காணலாம்.
ரிஷபம்
ராகு பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, முன்னேற்றம் ஆகியவற்றைப் பெறலாம். திருமண பாக்கியம் கைகூடும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை தேடல் வெற்றி பெறும். தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு உயரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சொத்துக்கள் பெருகும். வாகனம் வாங்குவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு சுப பலன்களைத் தருவார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரித்து காணப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஏழரை சனியின் இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும், சனி ராசியில் ராகு இருப்பதால் பெரும் நிம்மதி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

