MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி 2026! ஜூன் 2 முதல் இந்த 5 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! உங்க ராசி இருக்கா?

Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி 2026! ஜூன் 2 முதல் இந்த 5 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! உங்க ராசி இருக்கா?

Astrology: வரும் ஜூன் 2ம் தேதி, குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சக்திவாய்ந்த குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய 5 ராசிக்காரர்கள் அடுத்த சில மாதங்களுக்கு அசுர வளர்ச்சி பெற போகிறார்கள்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 29 2026, 01:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குரு பகவான் உச்சம்
Image Credit : Asianet News

குரு பகவான் உச்சம்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் என்று போற்றப்படும் குரு பகவான். இத்தகைய சிறப்புமிக்க குரு பகவான், வரும் ஜூன் 2ம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடக ராசி என்பது குரு பகவான் 'உச்சம்' பெறும் வீடாகும். அதாவது, அங்கு அவர் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சுபமான நிலையில் இருப்பார். உஜ்ஜைனைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பண்டிட் நளின் சர்மாவின் கணிப்பின்படி, இந்த அதிரடி குரு பெயர்ச்சியால் அடுத்த சில மாதங்களுக்கு அசுர வளர்ச்சியைப் பெறப்போகும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் என்ன என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷ ராசி - திடீர் பண வரவு
Image Credit : Pixabay

மேஷ ராசி - திடீர் பண வரவு

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எதிர்பாராத திருப்புமுனையாக அமையப்போகிறது. எதிர்பாராத வழிகளில் திடீர் பண வரவு உண்டாகும். நிதி நிலைமை முன்பை விட மிகவும் வலுவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய பொறுப்புகளுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் இரட்டிப்பாகும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி சரியான நேரத்தில் முடிவடைவதால் நிம்மதி பிறக்கும்.

Related Articles

Related image1
Saraswati Rajyog: சரஸ்வதி ராஜயோகம்: இந்த 6 ராசிகளுக்கு குபேரன் அருள்.! அடுத்த ஒரு வாரம் காசு மழைதான்.!
Related image2
Spiritual: இந்த இறைச்சியை சாப்பிட்டால் 7 தலைமுறைக்கு சாபம் உண்டாகும்.! மொத்த பரம்பரையே அழிந்து போகுமாம்.!
36
மிதுன ராசி - அதிர்ஷ்டத்தின் உச்சம்
Image Credit : Pixabay

மிதுன ராசி - அதிர்ஷ்டத்தின் உச்சம்

மிதுன ராசியினருக்கு நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்சனைகளும், தடைகளும் இந்த பெயர்ச்சியால் தவிடுபொடியாகும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். இளைஞர்கள் விரும்பியபடியே நல்ல நிறுவனங்களில் வேலை அமையும். கணவன்-மனைவி இடையே இருந்த நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள் தானாகவே சரியாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலக்குகளை அடைந்து மகிழ்ச்சி அடைவார்கள்.

46
சிம்ம ராசி - பதவி மற்றும் சமூக அந்தஸ்து
Image Credit : Pixabay

சிம்ம ராசி - பதவி மற்றும் சமூக அந்தஸ்து

சிம்ம ராசிக்காரர்களின் கௌரவமும், புகழும் சமூகத்தில் கிடுகிடுவென உயரும் காலமிது. நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் அமோக லாபம் கிடைக்கும். புதிய தொழில் அல்லது புதிய வியாபாரத்தைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இதுவே பொன்னான நேரம். பிள்ளைகளுடனான பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகள் சமூகத்தில் பெரிய சாதனை ஒன்றைப் படைத்து உங்களுக்கு பெருமை தேடித்தருவார்கள்.

56
துலா ராசி - திருமண யோகம் மற்றும் பண லாபம்
Image Credit : Pixabay

துலா ராசி - திருமண யோகம் மற்றும் பண லாபம்

துலா ராசியினருக்கு கல்வி மற்றும் சுப காரியங்களில் மிகப்பெரிய வெற்றிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த திருமணக் காரியங்கள் அனைத்தும் தற்போது சுலபமாக கைகூடி வரும். புதிய திட்டங்களைச் செயல்படுத்தி நல்ல பண லாபத்தை ஈட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக மாறி, சுறுசுறுப்பு கூடும்.

66
தனுசு ராசி - சொத்து சேர்க்கை
Image Credit : Pixabay

தனுசு ராசி - சொத்து சேர்க்கை

தனுசு ராசியின் அதிபதியே குரு பகவான் என்பதால், இந்த உச்ச பெயர்ச்சி இவர்களுக்கு இரட்டிப்பு நன்மைகளை வாரி வழங்கும். புதிய வீடு, கடை, வாகனம் அல்லது காலி மனை போன்ற சொத்துக்களை வாங்கும் யோகம் அமையப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கான ஆன்மீகப் பயணம் இப்போது சாத்தியமாகும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குரு பெயர்ச்சி (தமிழ்)
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saraswati Rajyog: சரஸ்வதி ராஜயோகம்: இந்த 6 ராசிகளுக்கு குபேரன் அருள்.! அடுத்த ஒரு வாரம் காசு மழைதான்.!
Recommended image2
Astrology : கனவுகளும் பலன்களும்: எந்த நேரத்தில் காணும் கனவு நிஜமாகும்? ஜோதிட ரகசியங்கள்!
Recommended image3
Vastu Tips: பணம் கொடுக்கல் வாங்கல் செய்யவே கூடாத நேரங்கள் எது தெரியுமா?
Related Stories
Recommended image1
Saraswati Rajyog: சரஸ்வதி ராஜயோகம்: இந்த 6 ராசிகளுக்கு குபேரன் அருள்.! அடுத்த ஒரு வாரம் காசு மழைதான்.!
Recommended image2
Spiritual: இந்த இறைச்சியை சாப்பிட்டால் 7 தலைமுறைக்கு சாபம் உண்டாகும்.! மொத்த பரம்பரையே அழிந்து போகுமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved