- Home
- Astrology
- Zodiac signs: கடகத்தில் குரு பகவான்.! சும்மா கம்முன்னு இருக்க வேண்டிய 5 ராசிகள்.! கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்.!
Zodiac signs: கடகத்தில் குரு பகவான்.! சும்மா கம்முன்னு இருக்க வேண்டிய 5 ராசிகள்.! கட்டாயம் செய்ய வேண்டிய பரிகாரம்.!
2025 அக்டோபர் 18 முதல் டிசம்பர் 5 வரை, குருபகவான் கடக ராசியில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். இந்த 48 நாள் பயணத்தால் 5 ராசிக்காரர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். அந்த பலன்களையும், செய்ய வேண்டிய பரிகாரங்களையும் விரிவாக விளக்குகிறது.

கட்டம் விட்டு கட்டம் மாறும் குரு பகவான்.!
வரும் அக்டோபர் 18, 2025 முதல் குருபகவான் கடக ராசியில் அதிசாரமாகச் சஞ்சரிக்கிறார். டிசம்பர் 5 வரை இவர் அங்கே தங்கியிருப்பார். இந்த 48 நாட்கள் சிலருக்கு நல்ல யோக பலன்களையும், சிலருக்கு சவால்களையும் தரக்கூடிய காலமாக இருக்கும். குறிப்பாக மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ள வேண்டும் என்று ஜோதிட அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேஷம்
குருபகவான் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வேலை வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைத்தாலும், வீண் சிரமங்கள் மற்றும் ஆரோக்கியக் குறைகள் வரக்கூடும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். தென்குடி “திட்டை குருபகவான்” கோயிலுக்கு சென்று வரலாம்.
கடகம்
ஜென்ம ராசியில் குருபகவான் அமருவதால் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், கடன் எடுப்பதைத் தவிர்க்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள்.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் மகான்களின் சமாதிகளில் சென்று தியானம் செய்யுங்கள். சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமிகளை தரிசித்து குமாரஸ்தவம் சொல்லி வழிபடுங்கள்.
துலாம்
குருபகவான் 10-ம் இடத்தில் இருப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். பதவியிலிருப்போர் சிரமங்களைச் சந்திக்கக்கூடும். நெருக்கமானவர்களிடமே கூட ரகசியங்களைப் பகிர வேண்டாம்.
பரிகாரம்: தங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் அல்லது வியாழக் கிழமைகளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்கவும். அங்கு ஆலய வலம் வந்து அன்னதானம் செய்வது சிறப்பானது.
தனுசு
குருபகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால், எதிர்பாராத செலவுகள் மற்றும் ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் கடன் கொடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் குருபகவானுக்கு ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுங்கள். “ஓம் ப்ரஹஸ்பதயே நம:” மந்திரத்தை தினமும் 108 முறை ஜபியுங்கள்.
கும்பம்
குருபகவான் ஆறாம் இடத்தில் இருப்பதால், வேலைப்பளு அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் கூட எதிரிகள் போல நடந்து கொள்வார்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்காது. வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: வியாழக் கிழமைகளில் சிவாலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் உடை சமர்ப்பிக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்யம் வைத்து வழிபடுங்கள். பூச நட்சத்திர நாளில் அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு.
நல்ல பலன்கள் விரைவில் கைகூடும்
குருபகவான் எல்லா ராசிகளுக்கும் எப்போதும் முழுமையான நன்மைகள் தரமாட்டார். சில நேரங்களில் சோதனைகளின் மூலமாக பாடம் கற்றுத் தருவார். எனவே மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரங்களைச் செய்தால் சவால்கள் குறைந்து நல்ல பலன்கள் விரைவில் கைகூடும்.