MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: விரைய சனியை விரட்டியடிக்கும் குரு பகவான்.! 6 ராசிகளுக்கு இனி பொற்காலம்.! பட்டம், பதவி தேடி வரும் நேரம்.!

Astrology: விரைய சனியை விரட்டியடிக்கும் குரு பகவான்.! 6 ராசிகளுக்கு இனி பொற்காலம்.! பட்டம், பதவி தேடி வரும் நேரம்.!

ஜூனில் நிகழும் உச்ச குரு பெயர்ச்சியால், 6 ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கம் குறைந்து தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் ராஜயோகம் போன்ற பலன்கள் கிடைக்கும். இது அவர்களுக்கு ஒரு ஜாக்பாட் காலமாக அமையும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 25 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
வாழ்க்கையில் முன்னேற்றம், செல்வ வளம், மதிப்பு, மரியாதை
Image Credit : Asianet News

வாழ்க்கையில் முன்னேற்றம், செல்வ வளம், மதிப்பு, மரியாதை

2026 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி ஜூன் 2 அன்று நடைபெறுகிறது. இந்த குரு பெயர்ச்சியில் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம்பெயர்கிறார். கடகம் குருவிற்கு உச்ச வீடு என்பதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் இந்த உச்ச குரு பெயர்ச்சி பல ராசிகளுக்கு ராஜயோகத்தை அளிக்கும் ஜாக்பாட் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஜோதிடத்தில் குரு பகவான் அருளைப் பெற்றால் வாழ்க்கையில் முன்னேற்றம், செல்வ வளம், மதிப்பு, மரியாதை ஆகியவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் விரயங்களை ஏற்படுத்தும் சனியின் தாக்கத்தை குறைத்து, நல்ல பலன்களை வழங்கும் குரு பார்வை சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை தரப் போகிறது. இதனால் ஜூன் முதல் வாரத்திற்கு பிறகு 6 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, பதவி உயர்வு போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் கூட இப்போது வெற்றியாக மாறும் காலமாக அமையலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
ரிஷபம் - பணம் குவியும் காலம்
Image Credit : Asianet News

ரிஷபம் - பணம் குவியும் காலம்

குரு பெயர்ச்சி முடிந்த பிறகு ரிஷப ராசியினருக்கு பண நெருக்கடிகள் பெரிதாய் குறையும். சனியின் தாக்கம் மெதுவாக பலவீனமடையும் என்பதால் தொழிலில் புதிய வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் தோன்றும். அரசுக்குள் அல்லது அரசு தொடர்புடையப் பணிகளுக்கு முயற்சி செய்பவர்கள் நல்ல முடிவு எதிர்பார்க்கலாம் என்கின்றனர் ஜோதிடர்கள். குடும்பத்தில் உறவுகளுடன் நல்ல உறவு பெருகி, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகமாக காணப்படும். முறையான முதலீடுகள் மூலம் சிறிய ஆனால் நிலையான லாபம் ஈட்டலாம். செலவுகளை திட்டமிட்டு சமயோசிதமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் இப்போது கிடைக்கும் வாய்ப்புகளை எதிர்காலத்திற்கும் பயன் படுத்துங்கள் எனவும் ஜோதிடர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Related Articles

Related image1
Astrology: சுவாரஸ்யமாக கதை சொல்லும் 3 ராசிகள்.! எதிரிகளை பேச்சிலேயே ஜெயிப்பார்களாம்.!
Related image2
Astrology: அள்ளிக்கொடுக்கும் அசுர குரு.! அடுத்த 2 மாதங்களுக்கு 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.! வீடு, வாசல், சொத்து சேரும் காலம்.!
38
 கடக ராசி - தங்க புதையலை அள்ளி வரும் குரு பகவான்
Image Credit : Asianet News

கடக ராசி - தங்க புதையலை அள்ளி வரும் குரு பகவான்

குரு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்காத நேரம் கடக்கிறது; இப்போது கடக ராசிக்காரர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பிருந்த தடைகள் நீங்கி பிறருக்கு புதிய  வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கும். நீண்டகாலமாக காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். பணப்பிரச்சனைகள் முழுமையாக தீர்ந்து அடுத்தவர்களுக்கு உதவும் வகையில் பணம் உங்களை வந்து சேரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள்  கிடை்ககும்.  வீடும் வாகனமும் வாங்கும் நிலை உருவாகலாம். குடும்ப உறவுகள் சீராகி சண்டை சச்சரவுகள் முழுமையாக மறையும். சனியின் தாக்கம் பலவீனமடைவதால் குரு பகவானின் நன்மைகள் முழுமையாக கிடைக்கும். திட்டமிட்டு முதலீடு செய்யதால் உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை முழுமையாக பெறளாம். வாய்ப்புகளை நம்பகத்தன்மையுடன்  பயன்படுத்தினால் நீங்கதான் அடுத்த அம்பானி.

48
சிம்ம ராசி - உயர் பதவி பெறும் வாய்ப்பு
Image Credit : Asianet News

சிம்ம ராசி - உயர் பதவி பெறும் வாய்ப்பு

குருபகவானின் அனுகிரகத்தால் சிம்ம ராசியினரின் செல்வாக்கு பல மடங்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசியல், நிர்வாக துறையில் பணிபுரிவோர் உயர் பதவி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நண்பர்கள் மற்றும் தொடர்புகளின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் தோன்றும். கூட்டுப்பணியில் வெற்றி கனவு நனவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதேபோல் சாதான சாமானியர்கள் பிரபலம் அடைந்து புகழ் அடைவார்கள்.  நிதி நிலை நீங்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகரிக்கும். கோடி கோடியாய் அக்கவுண்டில் பணம் குவியும் என்பதால் வருமானவரி கட்டுவதற்கு தயாராக இருங்கள்.  இலக்குகளை அடையும் செயல்திட்டங்கள்  உங்கள் பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகமாகவும் என்பதால் இனி உங்கள் மனநிலை எ்ப்போதும் உற்சாகமானதாக இருக்கும். இதுவரை சனியின் தாக்கத்தால் ஏற்பட்டு இருந்த தடைகள் அனைத்தும் காணாமல் போகும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள்.

58
துலாம் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்
Image Credit : Pixabay

துலாம் - புதிய முயற்சிகள் வெற்றி பெறும்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகு மன அழுத்தங்கள் முழுமையாக காணாமல் போகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தொழிலிலுள்ள போட்டிகள் படிப்படியாக காணாமல் போகும், நீங்கள் செய்யும் தொழிலில் சாதனை படைப்பீர்கள். சனி,ராகு,கேது போன்ற சிக்கலான பார்வைகள் குறைந்து எதிர்மறை தடைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷகரமான நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண தடையுடன் போராடி வந்தவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது. மனநிலையை கட்டுப்படுத்தி திட்டமிட்டு பணியாற்றினால் நீங்கள் உலகையே ஆட்சி செய்யலாம்.  

68
 தனுசு ராசி- பதவி உயர்வு கட்டாயம்
Image Credit : Asianet News

தனுசு ராசி- பதவி உயர்வு கட்டாயம்

குரு பகவானின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய  வெற்றி கிடைக்க போகிறது. கல்வி, வேலை மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி அடையும்.  புதிய வேலைவாய்ப்பு அல்லது திடீர் பதவி உயர்வு ஏற்படலாம், அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டயது அவசியம். சொத்து, பிராப்பர்டி வாங்கும் யோகம் கைக்கு வரும். பணவரவு அதிகரித்து சேமிப்பும் உயரும். எதிர்பாராத இடங்களில் இருந்து உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. விரய சனியின் தீவிர தாக்கம் ஜூனுக்குப் பிறகு உங்கள் காட்டில் பணமழை பொழியப்போகிறது. அதனால் நீண்டகாலத் தடைகள் காணாமல் போகும். திட்டமிட்டு முதலீடு செய்து, இதே நேரத்தில் செலவுகளை கவனமாக நிர்வகித்தால் நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்.

78
மீன ராசி - குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்
Image Credit : Pixabay

மீன ராசி - குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்

மீன ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தொடங்கும் காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். வேலை மாற்றம் அல்லது புதிய வேலை வாய்ப்புக்காக காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு உயரும். குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக சிந்தனை அதிகரித்து கோவில் தரிசனம், வழிபாடு போன்றவற்றில் ஈடுபாடு உருவாகும். உடல்நலத்தில் இருந்த சிறிய பிரச்சினைகளும் மெதுவாக சரியாகும். இந்த காலத்தில் எடுத்த முயற்சிகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும்.

88
என்ன செய்ய வேண்டும்?
Image Credit : AI

என்ன செய்ய வேண்டும்?

  • வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் மலர் சமர்ப்பிக்கலாம். 
  • கடலைப்பருப்பு தானம் செய்வது நல்ல பலன் தரும். 
  • தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானை வழிபடலாம். 
  • பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுவது மிகுந்த நன்மையை தரும்.

குரு பகவானின் அருளால் இந்த 6 ராசிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் தொடங்கப் போகிறது. இதுவரை தடைப்பட்டிருந்த விஷயங்கள் இனி வேகமாக முன்னேறும் காலமாக அமையலாம். பட்டம், பதவி, பணவரவு, சொத்து சேர்க்கை என பல நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Guru Peyarchi 2026 Palangal: அஷ்டம குருவாக நின்று அருள் புரியும் குரு பகவான்.! தனுசு ராசிக்கு அடுத்த ஒரு வருடம் மகா பாக்கிய யோகம்.!
Recommended image2
Guru Peyarchi 2026 Palangal: விருச்சிக ராசியின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் குரு.! கஷ்டங்கள் எல்லாம் முடிவுக்கு வரப்போகுது.!
Recommended image3
Mercury Transit 2026: சொந்த வீட்டுக்கு வரும் புதன் பகவான்! இந்த 3 ராசிகளுக்கு பக்கம் அதிர்ஷ்டக் காற்று! பணமழை கொட்டப்போகுதாம்!
Related Stories
Recommended image1
Astrology: சுவாரஸ்யமாக கதை சொல்லும் 3 ராசிகள்.! எதிரிகளை பேச்சிலேயே ஜெயிப்பார்களாம்.!
Recommended image2
Astrology: அள்ளிக்கொடுக்கும் அசுர குரு.! அடுத்த 2 மாதங்களுக்கு 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.! வீடு, வாசல், சொத்து சேரும் காலம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved