- Home
- Astrology
- ஜூன் 2026 ராசிபலன்: சொந்த வீடு, கார் வாங்கப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! பண மழை வெயிட்டிங்!
ஜூன் 2026 ராசிபலன்: சொந்த வீடு, கார் வாங்கப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! பண மழை வெயிட்டிங்!
June 2026 Horoscop: வரும் ஜூன் மாதத்தில் 4 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, சொந்த வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஜூன் 2026 ராசிபலன்
ஜோதிட சாஸ்திரத்தின்படி 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் கிரகங்களின் கூட்டணி காரணமாக, சில ராசிகளுக்கு அசையாச் சொத்துக்களான நிலம், வீடு மற்றும் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் மிக வலுவாக கூடி வந்துள்ளது. ஜூன் 2ஆம் தேதி நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி மற்றும் ஜூன் மாத கிரக நிலைகளின் அடிப்படையில் பெரும் பலன்களைப் பெறப்போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு ஜூன் மாதத்தில் 4ஆம் வீடான சுக ஸ்தானத்தில் கிரகங்களின் சாதகமான சஞ்சாரம் ஏற்படுவதால், நீண்ட நாள் கனவான சொந்த வீடு அல்லது மனை வாங்கும் யோகம் கைகூடும். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய சொகுசு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிதி நிலைமை சீராகி பணம் பல வழிகளிலும் வநது பையை நிரப்பும்.
சுப நாட்கள்: ஜூன் 17, 22 ஆகிய தேதிகள் வாகனம் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.
கடகம்
ஜூன் மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசியிலேயே (லக்னத்தில்) உச்சம் பெறுகிறார். மேலும், ஜூன் 8-ல் சுக்கிரனும் உங்கள் ராசிக்கு வருகிறார். ஜோதிட விதிகளின்படி, சுக்கிரன் வாகன காரகன் என்பதால் இந்த அமைப்பு உங்களுக்கு பெரும் சொத்து சேர்க்கையைத் தரும். புதிய வீடு கட்டி குடியேறும் யோகம் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். ஆடம்பர கார்கள் வாங்கும் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சுப நாட்கள்: ஜூன் 18, 19 ஆகிய தேதிகள் சொத்து ஒப்பந்தங்களுக்கு ஏற்றவை ஆகும்.
கன்னி
கன்னி ராசிக்கு 4ஆம் வீட்டின் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தை நோக்குவதாலும், 9-ஆம் வீடான பாக்ய ஸ்தானம் வலுப் பெறுவதாலும் பொருளாதார நிலை உயரும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைத்து, அதை நிலமாகவோ அல்லது வீடாகவோ மாற்றுவீர்கள். வியாபார நிமித்தமாக புதிய வணிக வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
சுப நாட்கள்: ஜூன் 24, 25 ஆகிய தேதிகள் புதிய முதலீடுகள் தொடங்குவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும் உகந்த நாட்களாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் செவ்வாய் மற்றும் சனி பகவானின் சாதகமான பார்வையின் காரணமாக நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பட்ஜெட்டுக்குள் புதிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரின் பெயரில் புதிய வாகனம் வாங்குவீர்கள்.
சுப நாட்கள்: ஜூன் 25, 26 ஆகிய தேதிகள் சொத்து பதிவுக்கு மிகவும் உகந்தவையாகும். ஆகவே இந்த நாட்களில் சொத்துகள், வாகனங்கள் வாங்கவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பொதுவான ராசிபலன்களின்படி மேற்கண்ட ராசிகளுக்கு இந்த யோகங்கள் இருந்தாலும், ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர்த்து, சுப முகூர்த்த நேரங்களில் உங்களது தனிப்பட்ட ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது முழுமையான நன்மையைத் தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

