- Home
- Astrology
- ஜனவரியில் உருவாகும் 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!
ஜனவரியில் உருவாகும் 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!
Rajayogas formed in 2026: 2026 ஆம் ஆண்டு பல்வேறு கிரகங்களின் அரிய சேர்க்கையினால் பல ராஜயோகங்கள் உருவாகின்றன. ஜனவரியில் உருவாகும் ராஜயோகங்கள் மற்றும் அவற்றால் பலன்பெறும் ராசிகள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

ஜனவரியில் 5 ராஜயோகங்கள்
பஞ்சகிரக யோகம்: ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் மகர ராசியில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் ஒன்றாக இணைவதால் வலிமையான பஞ்சகிரக யோகம் உருவாகிறது.
மகாலட்சுமி ராஜயோகம்: சந்திரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் இந்த யோகம் உருவாகிறது. இது திடீர் பணவரவு மற்றும் சொத்து சேர்க்கைக்கு வழிவகுக்கும்.
கஜகேசரி ராஜயோகம்: மிதுன ராசியில் சஞ்சரிக்கும் சந்திரன், அங்கு ஏற்கனவே இருக்கும் குருவுடன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இது புகழ் மற்றும் செல்வாக்கை அதிகரிக்கும்.
மாளவ்ய மற்றும் புதாதித்ய ராஜயோகம்: சுக்கிரன் மற்றும் புதனின் பலமான நிலையால் கலை, வணிகம் மற்றும் கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு அபரா வெற்றி கிடைக்கும்.
லாப திருஷ்டி யோகம்: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகும் இந்த யோகத்தால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
மேஷம்:
மேஷ ராசியின் 10-வது வீடான தொழில் மற்றும் கர்ம ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் தொழில் வளர்ச்சி உச்சத்தை அடையும். புதிய தொழில் தொடங்குவதற்கு அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு சரியான சூழல்கள் உருவாகும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு பணிக்கான அழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், அதிகாரமும் உயரும். நிலம் சார்ந்த பிரச்சனைகள் முடிந்து பணம் கைக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு கிடைக்கும். பழைய கடன்கள் தீரும்.
மிதுனம்:
மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவாவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகும். கடந்த காலங்களில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கி தெளிவான பாதை பிறக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு லாப திருஷ்டி யோகம் உருவாவதால் நிதி நிலைமை சாதகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவு மற்றும் முதலீடுகளில் இருந்து லாபம் போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகலாம். தொழிலில் புதிய முதலீடுகளை ஈர்த்து லாபம் காண்பீர்கள். தொழில் எதிரிகள் விலகுவதால் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு வணிகம் மற்றும் கூட்டாண்மையில் அமோக வெற்றி கிடைக்கும். பணிக்காக அல்லது மேல்படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மன அமைதி தரும் நல்ல விஷயங்களை மேற்கொள்வீர்கள். பேச்சில் நிதானமும் தெளிவும் பிறக்கும். திடீர் பணவரவும், தொழிலில் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் கிரகங்களின் சேர்க்கை நடப்பதால் மகர ராசிக்காரர்களின் தொழில் ரீதியான வெற்றிகளைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். கடந்த சில காலமாக இருந்த மன அழுத்தங்கள் நீங்கி தெளிவான பாதை பிறக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

