- Home
- Astrology
- Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு என்ட்ரி.! இந்த வாரம் பணம் மூட்டை மூட்டையா கிடைக்கப்போகுது.!
Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு என்ட்ரி.! இந்த வாரம் பணம் மூட்டை மூட்டையா கிடைக்கப்போகுது.!
This Week Rasi Palan Rishabam: ஜனவரி 18 முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
ரிஷப ராசிக்கு 9 ஆவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் புதிய முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். தன ஸ்தானத்தில் குரு இருப்பதால் இழந்த பணம் அனைத்தையும் மீட்கும் வாரமாக இது அமையும்.
பொதுவான பலன்கள்:
ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் வாரமாக இருக்கும். சுப கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் பண வரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். நிதி நெருக்கடியால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு கடன்களை அடைக்கும் வழிகள் பிறக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என மாற்றங்களால் வாழ்க்கையில் ஏற்றம் உண்டாகும். வீடு, வாகனம் போன்ற சொத்து சேர்க்கை நடைபெறும். நிதி சார்ந்த விஷயங்களில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.
வேலை மற்றும் தொழில்:
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு அல்லது இடம் மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய கிளைகளை தொடங்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு கனவு நிறைவேறும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கலை மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த வாரமாகும். வேலைக்காக வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இனிமை நிறையும் வாரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.
ஆரோக்கியம் மற்றும் கவ்வி:
உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நாள்பட்ட நோய்கள் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரை செலவுகள் குறையும். அஜீரணக் கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பெண்களுக்கு முதுகு அல்லது கால்வலி தொடர்பான சிறு உபாதைகள் வரலாம்.
மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டுவார்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு. ஆராய்ச்சி மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கல்விக்கான நிதி உதவிகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
18-01-2026 அன்று மாலை 4:41 வரை சந்திராஷ்டமம் இருக்கிறது. அதன் பின் நேரடி சந்திராஷ்டம நாட்கள் இல்லை. இருப்பினும் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். பயணங்களின் பொழுது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரங்கள்:
தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு செய்வது நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற மலர்கள் சாற்றி நெய் தீபமேற்றி வழிபடவும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட தடைகள் நீங்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சிறந்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

