- Home
- Astrology
- Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! இந்த வாரம் அமோகமா இருக்கப்போகுது.!
Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! இந்த வாரம் அமோகமா இருக்கப்போகுது.!
Rishaba Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

This Week Rasi Palan Rishabam
ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தை நோக்கி நகர்கிறார். இதன் காரணமாக எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும், வெற்றியும் கிட்டும்.
எதிர்பார்த்த வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும். வீடு மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
நிதி நிலைமை:
குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது பெரும் பலமாகும். இதனால் தன வரவு கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். தன காரகன் குருவின் பார்வையால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.
பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டம் அல்லது எதிர்பாராத சொத்து சேர்க்கை ஏற்படலாம். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் ஆரோக்கியத்தில் மேன்மையும், சௌக்கியமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த உடல் நலக் கோளாறுகள் நீங்கும்.
செரிமானக் கோளாறுகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். கண் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பான வாரமாக அமையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உங்கள் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை இந்த வாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
விரும்பிய இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்து வருபவர்கள் புதிய முதலீடுகளை செய்யலாம். சனி பகவானின் அருளால் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குலதெய்வத்தின் அருளால் தீரும். குடும்பத்தில் தந்தை மகன் உறவில் பாசமும், மனநிறைவும் உண்டாகும். பெரியவர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமை சேர்க்கும். உறவினர்களிடமிருந்த மனக்கசப்புகள் நீங்கி, சுமூகமான உறவு ஏற்படும்.
சந்திராஷ்டம நாட்கள்:
16-01-2026 மாலை 5:48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். அலைச்சல்கள் அதிகரிக்கக் கூடும் என்பதால் பயணங்களை தள்ளி வைப்பது நல்லது.
பரிகாரங்கள்:
அம்பிகைக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகைப்பூ சாற்றி வழிபடுங்கள். ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பது மன அமைதி தரும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தயிர்சாதம் அல்லது அன்னதானம் வழங்குவது சனியின் தோஷத்தை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

