- Home
- Astrology
- Vastu Tips: நீங்க பணக்காரர் ஆகணுமா? இந்த 5 சிலைகளை உங்க வீட்டில் வையுங்க.! செல்வம் கொட்டும்.!
Vastu Tips: நீங்க பணக்காரர் ஆகணுமா? இந்த 5 சிலைகளை உங்க வீட்டில் வையுங்க.! செல்வம் கொட்டும்.!
வாஸ்து சாஸ்திரத்தின்படி சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது செல்வம் வருவதை உறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. அந்த சிலைகள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு வகையான ஆற்றலுடன் தொடர்புடையது. வீட்டில் வைக்கும் சில பொருட்கள் நேர்மறை ஆற்றலையும், எதிர்மறை ஆற்றலையும் பரப்புகின்றன. உதாரணமாக சில சிலைகள், செடிகள், பூக்கள் வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அதே நேரத்தில் நின்று போன கடிகாரங்கள், உடைந்த பாத்திரங்கள், உடைந்த பொருட்களை வீட்டிற்குள் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும் என கூறப்படுகிறது. சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலைகள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற்று தரும் என்றும், செல்வத்தை பெருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த சிலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யானை சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி யானை சிலையானது சக்தி, செல்வம், மகிமை, செழிப்பு ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் பித்தளை, செம்பு அல்லது வெள்ளி யானை சிலையை வைத்திருப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. வீட்டில் யானை சிலைகளை வைத்திருக்கும் பொழுது அது நேர்மறை ஆற்றலை பரப்புவதோடு, குடும்பத்தின் நிதி நிலைமையும் பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இது தவிர யானை சிலைகள் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பராமரிக்கும் என்றும், புதிய வருமான ஆதாரங்களை திறக்கும் திறவுகோலாக விளங்குவதாகவும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
காமதேனு சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் காமதேனு பசுவின் சிலையை வைத்திருப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. காமதேனு என்பது முப்பது முக்கோடி தேவர்களும் குடியிருக்கும் ஒரு புனித தெய்வமாக இந்து மதத்தில் அடையாளம் காணப்படுகிறது. இதன் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். மேலும் உணவுக்கு ஒருபோதும் பஞ்சம் ஏற்படாது. பணத்திற்கு ஒருபோதும் பற்றாக்குறை ஏற்படாது. இது வீட்டின் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தினை அதிகரித்து, வாழ்க்கையில் வெற்றி மற்றும் செழிப்புக்கான கதவுகளையும் திறக்கிறது.
பிரமிடு (மேரு)
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஒரு பிரமிடு வைத்திருப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. பிரமிடு வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை பராமரிக்கும் என்று நம்பப்படுகிறது. சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது சொத்து வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் படிகம் அல்லது உலோகத்தால் ஆன பிரமிடுகளை வைத்திருப்பது மிகவும் நன்மை பயக்கும்.
ஆந்தை சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் ஆந்தை சிலையை வைத்திருப்பது லட்சுமி தேவியின் ஆசிகளை பெற உதவுகிறது. இந்த சிலையானது வருமானத்தை விரைவாக அதிகரித்து சொத்து, நிலம், மனை வாங்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆமை சிலை
வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆமை சிலையை வீடு அல்லது அலுவலகத்தில் வைத்திருக்கும் பொழுது வணிகம் அதிகரிக்கும். நிதிநிலைமை பலப்படும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.