- Home
- Astrology
- கணவன் மனைவி பிரச்சினையா?! தலையணையை மாற்றுங்கள்! எல்லாம் காணாமல் போகும்! இது தெரியாம போச்சே!
கணவன் மனைவி பிரச்சினையா?! தலையணையை மாற்றுங்கள்! எல்லாம் காணாமல் போகும்! இது தெரியாம போச்சே!
கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும் சமாதானம் ஆவதும் சகஜம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கை அறையில் சில மாறுதல்கள் செய்வதன் மூலம், தம்பதிகள் இடையே எழும் பிரச்சினைகள் சரியாகும். தலையணை படுக்கை விரிப்புகளின் நிறங்களை மாற்றுவதன் மூலம் காதல் பெருகும்.

முதலில் சாரி சொல்வது யார்?
காதல் திருமணம் செய்தாலும், பெற்றோர் திருமணம் செய்து வைத்தாலும், கணவன் மனைவிக்குள் சண்டை வருவதும், அதன் பிறகு சமாதானம் அடைவதும் சகஜமான விஷயம் தான். தற்போதைய சூழலில் சாரி சொல்லி யார் சமாதானத்திற்கான வெள்ளை கொடியை காட்டுவது என்பதில் தான் உள்ளது பிரச்சினையே.
இதை செஞ்சால் போதும் பிரச்சினையே வராது!
தம்பதிகள் இடையே ஏற்படும் பிரச்சினையை தீர்க்கவும், அல்லது பிரச்சினையே வராமல் இருப்பதற்கும் மிகவும் எளிமையான விஷயங்களை செய்தால் போதும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். அதேபோல் பயன்படுத்தும் ஆடை மற்றும் பொருட்களின் நிறங்களும் தம்பதிகள் இடையேயான பிரச்சினையை தீர்த்து வைப்பதாக மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லாவற்றையும் சரிசெய்யும் தலையணை
வீட்டின் படுக்கை அறையில் சில மாறுதல்களை செய்தால் கண்டிப்பாக கணவன் மனைவிக்கு இடையே எழும் பிரச்சினைகள் சரியாகும் என்ற வாஸ்து ஜோதிடம் சொல்கிறது. அதுவும் தலையணை மற்றும் படுக்கை நிறத்தை மாற்றினால் தம்பதிகள் இடையே இருக்கும் பிணக்குகள் நீங்கி காதல் பிறக்குமாம்.
நிம்மதி தரும் மென்மையான நிறங்கள்
போர்வை, மற்றும் பெட் கவர்கள் இளஞ்சிவப்பு, இளநீலம், கருப்பஞ்சல், சாம்பல் கலந்த வெள்ளை போன்ற மென்மையான நிறங்களில் இருந்தால் காதல், இணக்கம் பெருகும். மிகச் சாம்பல், முழு கருப்பு, அடர் சிவப்பு நிறங்களை அதிகம் பயன்படுத்தினால் கோபம், சண்டை, மன அழுத்தம் அதிகரிக்கும் என்று வாஸ்து சொல்கிறது.
தலையணை நிறம் (Pillow Colour)
தலையணையின் நிறம் இளம்சிவப்பு இருந்தால் தம்பதிகள் இடையே இருக்கும் மனஸ்தாபம் நீங்கி காதல் பிறக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திர நூல்கள். அதேபோல் தலையணையின் நிறம் பச்சை நிறத்தில் இருந்தால் அமைதியும், நம்பிக்கையும் கணவன் மனைவி உறவுக்குள் ஏற்படுமாம்.
இளஞ்சிவப்பு – காதல், மன நிறைவு
பச்சை – அமைதி, நம்பிக்கை
வெள்ளை – தூய்மை, நல்ல உறவு
இந்த வண்ணம் வேண்டாமே!
தலையணையை வண்ணம் சமாதானத்தை தரும் என்றால் அதில் கவனம் செலுத்தி நிம்மதி அடையலாம். அடர் சிவப்பு அல்லது அடர் கருப்பு நிற தலையணை தம்பதிகள் இடையே பதட்டத்தை கூட்டும். இதனால் இருவர் இடையே பிரச்சினை எழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சூழலுக்கு ஏற்ப மனப்போக்கை மாற்றும்
பொதுவாக வண்ணங்கள் மனநிலையை தாக்கக்கூடிய சில உளவியல் காரணிகள் கொண்டது. அதனால் நிறம், திசை, இடம் ஆகியவை உங்கள் உறவிற்கு நேரடியாக காரணம் அல்ல என்றாலும், சூழலுக்கு ஏற்ப மனப்போக்கை மாறச்செய்யும் என்பது உண்மை. நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தால் மென்மையான நிறங்களை தேர்ந்தெடுத்து முயற்சி செய்யலாம்.

