MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • முருகனை எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபட்டால் வெற்றிகள் குவியும்?

முருகனை எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபட்டால் வெற்றிகள் குவியும்?

தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் என்றாலே வெற்றிகளுக்கு அதிபதிதான். அதிலும் நம் ராசிக்கு ஏற்றவாறு, முருகனை எப்படி எளிய முறையில் கும்பிட்டால் காரிய சித்தி கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு வழிபட்டால் பலன் பல மடங்காக அதிகரிக்கும்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 17 2026, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்:
Image Credit : Getty

மேஷம்:

உங்கள் ராசி நாதன் செவ்வாய். முருகனுக்கு உகந்த ராசி உங்களுடையது. செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செவ்வரளி பூக்கள் சாத்தி, 'ஓம் சரவணபவ' மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், தைரியம் கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் :
Image Credit : Getty

ரிஷபம் :

உங்கள் ராசிக்கு முருகனின் குளிர்ச்சியான குணம் தேவை. கார்த்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதியில் முருகனுக்கு பால் அல்லது பன்னீர் அபிஷேகத்திற்குப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். வாழ்க்கையில் ஆடம்பர வசதிகளும், கணவன்-மனைவி ஒற்றுமையும் தேடி வரும்.

Related Articles

Related image1
Money Zodiac: குபேர யோகம்.. செல்வந்தராக வாழப்போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!
Related image2
Spiritual: நிச்சயம் பலன் தரும் வெற்றிலை ஜோதிடம்.! இழந்த சொத்துக்களை மீட்கும் அந்த "மேஜிக்" பரிகாரம்.!
312
மிதுனம் :
Image Credit : Getty

மிதுனம் :

புதனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள், முருகனுக்கு பச்சை கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும், 6 வெற்றிலைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது உங்கள் புத்தி கூர்மையை அதிகரிக்கும், தொழிலில் நஷ்டங்கள் நீங்கி லாபம் குவியும்.

412
கடகம் :
Image Credit : Getty

கடகம் :

எப்போதும் எமோஷனலாக இருக்கும் கடக ராசிக்காரர்கள், முருகனுக்கு விபூதி (திருநீறு) அபிஷேகம் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் 'திருப்புகழ்' பாடல்களைக் கேட்டு வாருங்கள். மனக்குழப்பங்கள் நீங்கி, இரும்பு போன்ற மன உறுதி கிடைக்கும்.

512
சிம்மம் :
Image Credit : Getty

சிம்மம் :

அதிகார குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், முருகனுக்கு செந்தாமரை மலர்களைச் சாத்தி, நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். அரசு வேலை தேடுபவர்களுக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கும் நினைத்தபடி யோகம் அடிக்கும்.

612
கன்னி :
Image Credit : Getty

கன்னி :

உங்களுக்குத் தெரியாமல் உங்களைச் சுற்றி எதிரிகள் இருக்கலாம். அதை முறியடிக்க, முருகனின் வேலுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபடுங்கள். கடன் தொல்லைகள் மற்றும் கண் திருஷ்டிகள் பனி போல உருகிவிடும்.

712
துலாம் :
Image Credit : Getty

துலாம் :

உங்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க, முருகனுக்கு பஞ்சாமிர்தம் அல்லது தேன் நைவேத்தியம் படைத்து, அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள், திருமணப் பேச்சுகள் உடனே கைகூடும்.

812
விருச்சிகம் :
Image Credit : Getty

விருச்சிகம் :

மேஷத்தைப் போலவே உங்களுக்கும் செவ்வாய் தான் அதிபதி. முருகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் (ஆடை) சாத்தி, தினமும் 'கந்த சஷ்டி கவசம்' படியுங்கள். தீராத நாள்பட்ட நோய்கள் தீரும், வழக்குகளில் வெற்றி நிச்சயம்.

912
தனுசு :
Image Credit : Getty

தனுசு :

ஆன்மீக நாட்டம் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், முருகனுக்கு மஞ்சள் அரளி அல்லது சாம்பங்கி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 'ஓம் நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரத்தோடு 'சரவணபவ'வையும் சேர்த்துச் சொல்ல, பொருளாதார நிலை உயரும்.

1012
மகரம் :
Image Credit : Getty

மகரம் :

சனியின் பிடியில் இருக்கும் உங்களுக்கு, முருகன் வழிபாடு ஒரு கேடயம். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் முருகனுக்கு பேரீச்சம்பழம் அல்லது கறுப்பு திராட்சை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வேலை அழுத்தங்கள் குறைந்து, தொழிலில் அசுர வளர்ச்சி காண்பீர்கள்.

1112
கும்பம் :
Image Credit : Getty

கும்பம் :

உங்கள் ராசிக்கு முருகனின் அருள் எப்போதும் வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு கற்கண்டு சாதம் படைத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குங்கள். பூர்வ புண்ணிய தோஷங்கள் நீங்கி, வம்சவிருத்தி உண்டாகும்.

1212
மீனம் :
Image Credit : Getty

மீனம் :

குருவின் வீட்டில் இருக்கும் மீள ராசிக்காரர்கள், முருகனின் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, வாசனை மிகுந்த பவளமல்லி பூக்களால் வழிபட வேண்டும். கையில் பணம் தங்கும், மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரகசியங்களின் 'லாக்கர்' இவங்கதான்! ரகசியத்தை காப்பதில் கில்லாடியான 5 ராசிகள்
Recommended image2
Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?
Recommended image3
Surya Nakshatra Parivartan 2026: ராகுவின் வீட்டில் குடியேறும் சூரிய பகவான்.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகுது.!
Related Stories
Recommended image1
Money Zodiac: குபேர யோகம்.. செல்வந்தராக வாழப்போகும் அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!
Recommended image2
Spiritual: நிச்சயம் பலன் தரும் வெற்றிலை ஜோதிடம்.! இழந்த சொத்துக்களை மீட்கும் அந்த "மேஜிக்" பரிகாரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved