மேஷ ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன் - 2ஆவது திருமணம் நடக்கும்? காசு, பணம் கொட்டும், கடன் பிரச்சனை தீரும்!
இந்தக் கட்டுரை ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறது மற்றும் குரு வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்கு எப்படி நல்ல காலமாக அமையும் என்பதை விளக்குகிறது. மேலும், குரு வக்ர பெயர்ச்சி எப்போது தொடங்கி எப்போது முடிகிறது என்றும், அடுத்த குரு பெயர்ச்சி எப்போது நடக்கும் என்றும் கூறுகிறது.
Guru Vakra Peyarchi 2024 - Mesha Rasi
குரு வக்ர பெயர்ச்சி பலன்களைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர் ஒவ்வொரு கிரகங்களும் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்பது கிரகங்கள் நவக்கிரகங்கள் எனப்படும். நவக்கிரகம் ஜோதிடத்தின் அடிப்படை அம்சம். எல்லா சிவன் கோயில்களிலும் நவக்கிரகங்கள் இருக்கும். கிரக பெயர்ச்சி அடிப்படையில் ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் நவக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி, பரிகாரம் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.
கிரக பெயர்ச்சி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது என்று பார்க்கலாம் வாங்க…
சந்திரன் – இரண்டேகால் நாட்கள்
சூரியன் – 30 நாட்கள்
புதன் – 30 நாட்கள்
சுக்கிரன் – 30 நாட்கள்
செவ்வாய் - 45 நாட்கள்
குரு பகவான் – ஒரு வருடம்
சனி பகவான் – இரண்டரை ஆண்டுகள்
ராகு மற்றும் கேது பகவான் – ஒன்றரை ஆண்டுகள்
Mesha Rasi Guru Vakra Peyarchi Palan 2024
இதில், மாதந்தோறும் நடக்கும் கிரகங்கள் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. குரு, சனி மற்றும் ராகு, கேது பெயர்ச்சிகள் மட்டுமே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. கடந்த மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்த பெயர்ச்சியின் மூலமாக மேஷ ராசிக்காரர்கள் கலவையான பலன்களை அனுபவித்து வந்தனர். இதில், சிலருக்கு விவாகரத்து நடந்திருக்கும். இன்னும் சிலருக்கு திருமணத் தடை ஏற்பட்டிருக்கும்.
Aries Guru Vakra Peyarchi Palan 2024
ஆனால், இதற்கெல்லாம் தற்போது விடிவு காலம் பொறந்தாச்சு. எப்படி என்று கேட்கிறீர்களா? அது தான் குரு வக்ர பெயர்ச்சி. அக்டோபர் 9 ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த வக்ர பெயர்ச்சி பலன் 4 மாதங்கள் வரை நீடிக்கும். அதாவது, அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 ஆம் தேதி வரையில் ரிஷப ராசியில் குரு பகவான் வக்ர நிலையில் நீடிப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார்.
ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு பகவான் வக்ரம் அடைகிறார். குரு பெயர்ச்சி சரி, வக்ர பெயர்ச்சி சரி இரண்டும் ஒவ்வொரு ராசியினருக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி ஒவ்வொரு ராசியினருக்கும் குரு வக்ர பெயர்ச்சி பலனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம் வாங்க..முதலில் நாம் பார்க்கப் போவது மேஷ ராசிக்காரர்கள்.
Aries Guru Vakra Peyarchi 2024
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கணவன் – மனைவி இருவரும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் நடக்கும். திருமணமாகாத மேஷ ராசி அன்பர்களுக்கு திருமணம் கை கூடும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். கடன் பிரச்சனை முடிவுக்கு வரும்.
திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வேலையில் சம்பள உயர்வு, புரமோஷன் கிடைக்கும். ஆனால், எதையும் யோசித்து செய்ய வேண்டும். வீடு, நிலம் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அரசியலில் இருப்பவர்கள் தங்களது வேலையில் கவனமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் குரு வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு குதூகலத்தை கொடுக்கும் ஒரு பெயர்ச்சியாக இருக்கும்.
Guru Vakra Peyarchi Palan 2024 Mesham
அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் மீண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அப்படி வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் மங்களகரமானதாக இருக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் பலன் அதிகம். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். ஒரு ராசியில் குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் பலன் அதிகம். அடுத்த குரு பெயர்ச்சி வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நிகழ்கிறது. ரிஷப ராசியிலிருந்த குரு பகவான் 3ஆம் வீடான மிதுனத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு 2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்….