ஆசையை தூண்ட போகும் குரு சுக்கிரன் சேர்க்கை – தல காலு புரியாம ஆட போகும் ராசிக்காரங்க யாரெல்லாம்?
Guru Sukran Serkai 2025 Palan Tamil : குரு சுக்கிரன் இணைந்து என்னென்ன பலன்களை கொடுக்க போகிறார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
Jupiter Venus Serkai Palan Tamil, Jupiter Venus Conjunction 2025
Guru Sukran Serkai 2025 Palan Tamil : ஜோதிடத்தில் ரொம்பவே முக்கிய கிரகங்கள் என்றால் அது குரு, சனி, ராகு மற்றும் கேதுக்கள் தான். இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து ராஜயோகம் உருவாகும்.ஜோதிடத்தில் குருவும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகை கிரகங்கள். குரு என்றால் ஆசான் நல் வழியில் டிராவல் பண்ணக் கூடியவர்.
ஆனால், சுக்கிரனோ அதற்கு எதிர்மறையானவர். அதாவது அழகு, வசியம், காமக் காரகன். பெண்கள் மீது ஆசை கொள்ளக் கூடியதை குறிப்பவர் சுக்கிரன். அதனால் தான் இரு கிரகங்களுமே பகை கிரகங்கள். வரும் 2025 ஆம் ஆண்டு இந்த 2 கிரகங்களும் இணைந்து யார் யாருக்கு என்ன பலன்களை கொடுக்க போகிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.
Venus Jupiter Conjunction, Libra Predictions, Guru Sukran Serkai 2025 Palan Tamil
துலாம் ராசி:
குரு சுக்கிரன் சேர்க்கை துலாம் ராசிக்கு இரட்டிப்பு லாபத்தை கொண்டு வந்து தரப்போகிறது. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும். குழந்தைக்கான அறிகுறி உண்டாகும். எடுத்த காரியம் வெற்றியில் முடியும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தொழி, வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Jupiter Venus Conjunction 2025 Palan in Tamil, Guru Sukran Serkai 2025 Palan Tamil
மிதுனம் ராசி:
குரு சுக்கிரன் இணைவு மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான ஆசிகளை வழங்க போகிறார்கள். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். மகன் அல்லது மகளுக்கு வேலை இல்லை என்ற கவலைப் பட்டால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். இது போன்று ஒவ்வொரு விஷயங்களிலும் நடக்கும். நல்ல வரன் அமையும்.
திருமணம் நடக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வருமானத்திற்கு புதிய வழிகள் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்க பெறுவீர்கள். இனி கவலை வேண்டாம்.
Guru Venus Serkai Palan Tamil, Leo Predictions Tamil, Guru Sukran Serkai 2025 Palan Tamil
சிம்மம் ராசி:
சிம்ம ராசியினருக்கு இதுவரையில் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்க போகிறது. கிடப்பில் போடப்பட்ட வேலைகள் ஒவ்வொன்றாக நடந்து முடியும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். அதனால் வெற்றியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் தான். வருமானம் அதிகரிக்கும்.