MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Horoscope: குரு-செவ்வாய் கூட்டணியால் கோடீஸ்வர யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை.. உங்க ராசி இருக்கா?

Horoscope: குரு-செவ்வாய் கூட்டணியால் கோடீஸ்வர யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு பண மழை.. உங்க ராசி இருக்கா?

Horoscope: கடகத்தில் குரு-செவ்வாய் சேர்க்கையால் 4 ராசிகளுக்கு ராஜயோக பலன்களும் அக்டோபர் முழுவதும் அதிர்ஷ்ட மழையும் பொழியும் என ஜோதிடம் கூறுகிறது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 01 2026, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குரு செவ்வாய் கூட்டணி தரும் கோடீஸ்வர யோகம்
Image Credit : AI

குரு-செவ்வாய் கூட்டணி தரும் கோடீஸ்வர யோகம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் சுபக் கிரகங்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் குரு பகவானும், வீரம் மற்றும் ஆற்றலின் காரகரான செவ்வாயும் இணைவது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இவ்விரு கிரகங்களின் பலம் ஒருவருக்குத் தைரியத்தையும், தலைமைப் பண்பையும், அதோடு எல்லையற்ற செல்வம் மற்றும் செழிப்பையும் வாரி வழங்கும்.

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இவருடன் செவ்வாய் பகவானும் அதே ராசியில் இணைந்துள்ளார். இந்த அரிய கிரகங்களின் சங்கமம் வரும் அக்டோபர் 31 வரை நீடிக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலித்தாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு இது மிகுந்த லாபகரமான மற்றும் பொற்காலமான மாதமாக அமையப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார்? யார்? என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. ரிஷபம்
Image Credit : ChatGPT

1. ரிஷபம்

ரிஷப ராசியின் 3-வது பாவத்தில் உருவாகியுள்ள குரு-செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு அற்புத நன்மைகளை தரப் போகிறது. நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தடைகள் விலகி வெற்றி உங்களைத் தேடி வரும். வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் நபர்களுக்கு மனதுக்குப் பிடித்த நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரலாம். கடின உழைப்புக்கான அங்கீகாரம் உங்களை உன்னத நிலைக்கு உயர்த்தும். குடும்பத்தினரின் பூரண ஒத்துழைப்புடன், நண்பர்களின் வட்டாரத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரும். தம்பதிகளுக்கு இடையேயான அந்நியோன்யம் அதிகரிக்கும். பரஸ்பர புரிதல் மனதிற்கு அமைதியைத் தரும்.

35
2. துலாம்
Image Credit : ChatGPT

2. துலாம்

துலாம் ராசிக்கு 10-வது வீட்டில் இந்த சக்திவாய்ந்த இணைவு நிகழ்ந்துள்ளது. தொழில் மற்றும் உத்தியோக ரீதியாக இது ஒரு திருப்புமுனைக் காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த இடமாறுதல் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அசையா சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பது தொடர்பான முயற்சிகளில் லாபகரமான முடிவுகள் கிடைக்கும்.ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட முதலீடுகள் மூலம் இரட்டிப்பு லாபம் கைக்கு வந்து சேரும். திருமணமாகாத கன்னி ராசிகளுக்கு நல்ல வரன் கைகூடி வரும் யோகம் உண்டு.

45
3. தனுசு
Image Credit : ChatGPT

3. தனுசு

தனுசு ராசியின் 8-வது வீட்டில் அமைந்துள்ள இந்த கிரகக் கூட்டணி, உங்களுக்கு எதிர்பாராத பல புதிய பரிமாணங்களையும் முன்னேற்றங்களையும் தரக் காத்துеள்ளது. வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது உயர் கல்வி முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு சிறப்பான நிதி ஆதாயம் கிடைக்கும்.மாணவ செல்வங்களுக்கான கல்வித்துறையில் தடைகள் அகன்று, பரிசுகளும் பாராட்டுக்களும் குவியும்.ஆடம்பரமான மற்றும் வசதியான வாழ்க்கை முறையை அனுபவிப்பீர்கள். இம்மாதத்தில் உங்களைத் தேடி வரும் தொடர்ச்சியான நற்செய்திகள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.

55
4. கடகம்
Image Credit : ChatGPT

4. கடகம்

உங்கள் சொந்த ராசியிலேயே உச்சம் பெற்ற குருவுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் இக்காலகட்டம் உங்களுக்கு ராஜயோக பலன்களைத் தரும். உங்கள் ஆளுமையும், தன்னம்பிக்கையும் சமூகத்தில் தனித்து அடையாளம் காட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வருகையால் லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் நீண்ட நாளாக நிலவிவந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து அமைதி நிலவும். அரசுத் துறை அல்லது நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அதிகாரமிக்க புதிய பொறுப்புகள் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பொதுவான பலன்களின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் துல்லியத்தன்மைக்கு எங்கள் தளம் எந்தவித பொறுப்பையும் ஏற்காது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சஷ்டியில் தொடங்கும் ராஜயோகம்.! தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது யார்?! ஜோதிடம் சொல்லும் ரகசியம்.!
Recommended image2
Birth Star: உங்க பிறந்த நட்சத்திரம் இதுதானா? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
Recommended image3
Pratiyuti Yoga : பிரதியுதி யோகத்தால் திறக்கும் ராஜவழி... ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகப்போகும் 5 ராசிகள்..!
Related Stories
Recommended image1
புதன் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. பண விஷயத்தில் உஷார்!
Recommended image2
சனி பகவானால் அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் 3 ராசிகள்.. கோடீஸ்வர யோகம் கூடி வருது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved