MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதன் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. பண விஷயத்தில் உஷார்!

புதன் பெயர்ச்சியால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. பண விஷயத்தில் உஷார்!

Budhan Peyarchi 2026: புதன் பகவான் துலாம் ராசிக்குள் பெயர்ச்சி அடைய உள்ளதால் 3 ராசிக்காரர்கள் அடிமேல் அடி வாங்கப் போகிறார்கள். பண விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 25 2026, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதன் பெயர்ச்சி 2026
Image Credit : AI

புதன் பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி நவகிரகங்களின் இளவரசனாக போற்றப்படும் புதன் பகவான், புத்தி கூர்மை, பேச்சுத் திறன், கல்வி, வர்த்தகம் மற்றும் துரிதமான முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவற்றுக்கு காரணியாக திகழ்கிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், பொதுவாக ஒரு ராசியில் சுமார் 21 நாட்கள் வரை சஞ்சரிப்பார்.

அந்த வகையில், தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் வலம் வரும் புதன் பகவான், வரும் செப்டம்பர் 26 அன்று துலாம் ராசிக்குள் பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசிக்கு புதன் நுழைவது அனைத்து ராசிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு இது பெரும் முன்னேற்றத்தைத் தந்தாலும், சில ராசியினர் நிதி மற்றும் தொழில் ரீதியாக சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

இந்த புதன் பெயர்ச்சியால், எதிர்வரும் நாட்களில் பண நெருக்கடி மற்றும் பணிச்சுமை போன்ற பல்வேறு சவால்களைச் சந்திக்கப் போகும் அந்த 3 ராசிக்காரர்கள் யார்? என்பதை விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. ரிஷபம்
Image Credit : Asianet News

1. ரிஷபம்

ரிஷப ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் செல்வதால், இந்த கால கட்டத்தில் இவர்கள் பலப்பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்ப உறவுகளில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன்பு ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது.

வீண் செலவுகள் படுவேகமாக அதிகரிக்கும் என்பதால், பட்ஜெட்டை கவனித்துச் செலவிடுவது புத்திசாலித்தனம். அவசரப்பட்டு எந்த ஒரு இடத்திலும் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்; இது பெரிய நிதி இழப்புக்கு வழிவகுத்துவிடும்.

34
2. கடகம்
Image Credit : Asianet News

2. கடகம்

கடக ராசியின் 4-வது வீட்டிற்குப் புதன் பெயர்ச்சியாவதால், இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கான தன்னம்பிக்கை குறையக்கூடும், அதோடு பல்வேறு தடைகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

எதிர்பாராத விரயங்கள் மற்றும் செலவுகள் உங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அந்தத் தொகை கைக்கு வருவதில் காலதாமதம் ஏற்படலாம். சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் உரையாடும்போது வார்த்தைகளில் நிதானம் மிகவும் அவசியம். தொழில் செய்பவர்கள் பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்க்கவும், அவசர முடிவுகளை எடுப்பதைத் தள்ளிப்போடவும்.

44
3. தனுசு
Image Credit : Asianet News

3. தனுசு

தனுசு ராசியின் 11-வது வீட்டிற்கு புதன் செல்வது இவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி விஷயங்களில் கூடுதல் பொறுமையைச் சோதிக்கும் காலமாக அமையும். நீங்கள் நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கும் நபராக இருந்தால், இன்னும் சில காலம் காக்க வேண்டியிருக்கும்.மாணவர்களுக்குப் படிப்பின் மீது கவனம் சிதறவும், ஆர்வம் குறையவும் வாய்ப்புள்ளது.

கூட்டாண்மைத் தொழில் செய்பவர்கள் அல்லது புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்கும் நபர்கள் நிதி விஷயங்களை மிகத் கவனமாகக் கையாள்வது அவசியம். இல்லையெனில், பெருத்த நஷ்டம் ஏற்படலாம். அன்றாடப் பணிகளைச் செய்து முடிப்பதில் தாமதமும் மனச்சோர்வும் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். இந்தக் காலத்தில் மேற்கண்ட ராசிக்காரர்கள் தேவையில்லாத டென்ஷனைத் தவிர்த்து, நிதானத்துடன் எதையும் அணுகுவது பல சிக்கல்களில் இருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Horoscope: வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று யாருக்கு புதிய வாய்ப்பு? 12 ராசிகளின் பலன்கள்
Recommended image2
40 வயசுக்கு மேல்தான் ஆட்டமே ஆரம்பம்! வாழ்க்கையை புரட்டிப் போடும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!
Recommended image3
Navapanchama Raj Yoga : அடிபொலி பலன்களை அள்ளித்தரும் நவபஞ்சம ராஜயோகம்: 6 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு தான்...!
Related Stories
Recommended image1
Astrology Predictions: அரசு வேலை யோகம் கைகூடும் 5 ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா?
Recommended image2
குருவால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. பண மழை கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved