- Home
- Astrology
- Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்! அதிர்ஷ்ட மழை, பண மழை கொட்டப் போகுது!
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்! அதிர்ஷ்ட மழை, பண மழை கொட்டப் போகுது!
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பித்துள்ளது. பணமழை, அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள் எவை என்று விரிவாக பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2026
வேத ஜோதிடத்தில் வளர்ச்சி, ஞானம், அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு அதிபதியாகத் திகழ்பவர் குரு பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர சுமார் ஓராண்டு காலம் எடுத்துக்கொள்ளும் குரு பகவான், தற்போது தனது உச்ச வீடான கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
வரும் அக்டோபர் 31 அன்று குரு பகவான் கடக ராசியில் இருந்து பெயர்ச்சியாகி, சிம்ம ராசியில் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளார். தொடர்ந்து ஜனவரி 25, 2027 வரை சிம்ம ராசியில் பயணிக்கும் குரு பகவான், அதன்பின் வக்ர நிலையை அடைந்து மீண்டும் கடக ராசியை நோக்கி நகர்வார்.
இந்த குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தையும் முன்னேற்றத்தையும் தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி கீழே விரிவாகக் காண்போம்.
1. மேஷம்
மேஷ ராசிக்கு 5-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் வரவுள்ளார். வேலைதேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த நல்ல பணி அமையும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வணிக விரிவாக்கமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி காண்பார்கள். புதிய வழிகளில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உருவாகும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
2. கடகம்
கடக ராசிக்கு 2-ஆம் இடமான தன ஸ்தானத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வருமான வரத்து கணிசமாக உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் சிறப்பான லாபம் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்பதவியில் உள்ள செல்வாக்குமிக்க நபர்களின் தொடர்பு கிடைக்கும். அவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் நல்ல பலன்களை அடையலாம்.
3. சிம்மம்
சிம்ம ராசிக்கு 1-ஆம் இடமான ஜென்ம ராசியிலேயே குரு பகவான் நுழைகிறார்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்; தலைமைப் பண்புகள் மேலோங்கும். சமூகத்தில் உங்களுக்கான மரியாதையும் அந்தஸ்தும் உயரும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகளும் உயர் பதவிகளும் தேடிவரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவால் நிதி நெருக்கடிகள் அனைத்தும் விலகும்.
4. துலாம்
துலாம் ராசிக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகை தருகிறார். நிதி நிலைமையில் மிகப்பெரிய நேர்மறை மாற்றங்கள் நிகழும். வருமானம் பல வழிகளிலும் பெருகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடர்புகள் மற்றும் வாடிக்கையாளர்கள் மூலமாக வணிகத்தில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.

