மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்!
Guru Peyarchi 2025 Palan For all 12 Zodiac Signs : ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான் 12 ராசிகளுக்கும் எந்த மாதிரியான பலனை தருவார் என்பது பற்றி பார்க்கலாம்.

குருவின் பெயர்ச்சி 2025
Guru Peyarchi 2025 Palan For all 12 Zodiac Signs :ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் தனது ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். குருவின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏற்கனவே வாக்கியப் பஞ்சாங்கப்படி கடந்த 11 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியானார். திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்று 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியானார். குருவின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளில் யார் யாருக்கு என்ன பலன் என்பது குறித்து பார்க்கலாம்.
மேஷ ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
மேஷ ராசிக்கு 2ஆவது இடத்திலிருந்த குரு பகவான் இப்போது 3ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். குருவின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்கு வண்டி, வாகன சேர்க்கையை உருவாக்கி கொடுக்கும். வேலை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களது பணத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
ரிஷப ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன் தமிழ்:
ரிஷப ராசிக்கு குரு பகவான் 2ஆவது இடத்திற்கு வந்து அமர்கிறார். இது தன ஸ்தானத்தை குறிக்கும். இதுவரையில் உங்களுக்கு இருந்த தடைகள் யாவும் விலகும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுன ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
2025ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியைப் பொறுத்த வரையில் குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இது மிதுன ராசிக்கு முதல் இடம். ராசியிலேயே குரு பகவான் அமர்ந்துள்ளார். மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சியை பொறுத்த வரையில் பண வரவு சிறப்பாக இருக்கும். திருமணம் நடக்கும்.
கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
கடக ராசியை பொறுத்த வரையில் குரு பகவான் 12 ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளார். இது மறைவு ஸ்தானம். இது உங்களுக்கு எல்லா முயற்சியிலும் வெற்றியை தேடி தரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கச் செய்யும்.
சிம்மம் ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
சிம்ம ராசிக்கு குரு பகவான் 11ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளார். இது நிதி பிரச்சனையை சரி செய்யும். லாப ஸ்தானத்திற்கு வந்துள்ள குரு பகவான் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை தருவார்.
கன்னி ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி 10ஆவது இடத்திற்கு வந்துள்ளார். 10ஆவது இடம் ஜீவன ஸ்தானத்தை குறிக்கிறது. இது உங்களுக்கு பொருளாதார பிரச்சனையை சரி செய்யும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி 2025 பலன்:
துலாம் ராசியை பொறுத்த வரையில் குரு பகவான் 9ஆவது இடத்திற்கு வருகிறார். பூர்வீக சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். இதுவரையில் பிரிந்து இருந்தவர்கள் விரும்பி வந்து ஒன்று சேர்வார்கள்.
விருச்சிகம் ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
விருச்சிக ராசிக்கு குரு பகவான் 8ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகியுள்ளார். இது அஷ்டமத்து ஸ்தானம். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பணம் விரையம் ஏற்படக் கூடும்.
தனுசு ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
தனுசு ராசிக்கு குரு 7ஆவது இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். 7ஆவது ஸ்தானம் மனைவி மக்களை குறிக்கும். இதுவரையில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சொந்தமாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீடு, வாகனம் வாங்கலாம். வேலை, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் ராசிக்கான குரு பெயர்ச்சி 2025 பலன்:
மகரம் ராசியைப் பொறுத்த வரையில் குரு பகவான் 6ஆவது இடத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் இந்த பெயர்ச்சி உங்களை முக்கிய முடிவுகள் எடுக்க வைக்கும். முதலீடுகள் மூலமாக லாபம் உண்டாக்கும்.
கும்பம் ராசிக்கான 2025 குரு பெயர்ச்சி பலன்:
கும்பம் ராசிக்கு குரு பகவான் 5ஆவது இடத்திற்கு வந்துள்ளார். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.
மீனம் ராசிக்கான 2025 குரு பெயர்ச்சி பலன்:
மீன ராசிக்கு குரு பகவான் 4ஆவது இடத்திற்கு வந்துள்ளார். இது உங்களுக்கு பாராட்டுகளை பெற்று கொடுக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களது நீண்ட நாள் ஆசைகள் யாவும் நிறைவேறும்.