- Home
- Astrology
- Guru Peyarchi 2025: வேறு திசையில் நகரும் குரு பகவான்.! டிச.5 முதல் இந்த 5 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!
Guru Peyarchi 2025: வேறு திசையில் நகரும் குரு பகவான்.! டிச.5 முதல் இந்த 5 ராசிகள் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போறீங்க.!
Guru Peyarchi Rasi Palangal 2025: டிசம்பர் 5, 2025 குரு பகவானின் நிலையில் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது. குருவின் இந்த பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். அவரின் நிலைகளில் ஏற்படும் மாற்றமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குரு பகவான் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் டிசம்பர் 5 2025 அவர் மீண்டும் மிதுன ராசிக்குள் குடியேறுகிறார். மிதுன ராசியில் அவர் மார்ச் 11, 2026 வரையில் பயணிப்பார். குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு குரு பகவான் லக்ன வீட்டில் குடியேறுகிறார். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை பண்புகள் மேம்படும். குழப்பமான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். உங்களின் தனித்திறமைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான தெளிவான புரிதல் பிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது வாழ்க்கையில் புதிய வெற்றிகளை கொண்டு வரும். எதிர்வரும் சவால்கள் அனைத்தையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். நீண்ட காலமாக நிலவி வந்த தொழில் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு மூலம் உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் பிறக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் பத்தாவது வீட்டில் இந்த குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. பத்தாவது வீடு தொழில் ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே குரு பகவானின் ஆசியால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க உள்ளீர்கள். சிறு தொழில் செய்து வருபவர்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வீர்கள். வெளிநாடுகளுக்கும் தொழிலை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இணைய வழியில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் பிறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். எனவே இதுவரை திருமணமாகாமல் இருந்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் முடியும். யோகம் கைகூடும். பணியிடத்தில் உங்கள் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் புதிய யோசனைகள் பாராட்டப்படும். உங்கள் வேலைகளை முடித்து வெற்றியைக் காண்பீர்கள். எதிர்பாராத வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தின் ஐந்தாவது வீட்டில் குரு பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை அனுபவிப்பீர்கள். குறிப்பாக குழந்தைகள் வழியாக நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். படித்து முடித்து வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கலாம். ஒட்டுமொத்தமாக நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் காலமாக இது இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

