- Home
- Astrology
- Astrology: குருவுடன் கைகோர்த்த செவ்வாய்.! உருவாகும் குரு மங்கள ராஜயோகத்தால் கோடிகளை அள்ளப்போகும் 5 ராசிகள்.!
Astrology: குருவுடன் கைகோர்த்த செவ்வாய்.! உருவாகும் குரு மங்கள ராஜயோகத்தால் கோடிகளை அள்ளப்போகும் 5 ராசிகள்.!
Guru Mangal Rajyog: அக்டோபர் மாதத்தில் குரு மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் குரு மங்கள ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

குரு மங்கள ராஜயோகம்
அக்டோபர் மாதம் கிரக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதம் இரண்டு முக்கிய கிரகங்களான குரு மற்றும் செவ்வாய் இணைந்து மங்களகரமான ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த மாதம் குரு அதன் உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்து ஹன்ஸ் ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். அதே நேரத்தில் செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் நுழைந்து ருச்சக ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
இந்த இரண்டு சுப கிரகங்கள் உருவாக்கும் ராஜயோகமனது 5 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் மற்றும் குரு இருவரும் உண்டாக்கும் குருமங்கள ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் தரும். இந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். செவ்வாய் மற்றும் குருவின் சேர்க்கை காரணமாக குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் ஏற்படும். நிதி நிலைமை எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பல நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
சிலருக்கு சொந்த வீடு அல்லது புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உண்டு. உங்கள் தாயாரின் உடல்நலத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் நல்ல பலன்களைத் தரவுள்ளது. குரு உங்கள் செல்வ வீட்டின் வழியாக சஞ்சரிப்பதால், உங்கள் நிதி நிலைமை அபரிமிதமாக அதிகரிக்கும். உங்களின் திறமையால் நீங்கள் சமூகத்தில் உரிய அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்திலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பரம்பரை அல்லது மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த மாதத்தில் நீங்கள் சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்புகளும் ஏற்படலாம். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். லாபத்தை பெருக்குவதற்கான புதிய கதவுகள் திறக்கப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பல வழிகளில் நன்மையைத் தரவுள்ளது. கடக ராசி என்பது குரு உச்சம் பெறும் ராசியாகும். அக்டோபர் மாதத்தில் குரு கடக ராசியின் லக்ன வீட்டிலும், செவ்வாய் ஐந்தாவது வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மனவலிமை அதிகரிக்கும். இதுவரை குழப்பமான முடிவுகளை எடுத்து வந்த நீங்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் தொடங்க நினைப்பவர்கள் வெற்றிகரமாக தொழிலைத் தொடங்குவீர்கள். சிறிய தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் இந்த காலத்தில் சிறந்து விளங்குவீர்கள்.
மகரம்
அக்டோபர் மாதத்தில் செவ்வாய் பகவான் உங்கள் லாப வீட்டில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். எனவே மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் பல வழிகளில் இருந்து நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவால் பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றியை ஈட்டுவீர்கள். புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்களை செயல்படுத்தி உங்கள் வணிகத்தை பெருக்குவீர்கள். இதன் காரணமாக அபரிமிதமான செல்வம் கிடைக்கும்.
உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். இந்த மாதம் அன்புக்குரியவருடன் ஒரு நீண்ட தூர பயணத்தையும் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியான சூழலும் நிலவும். சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புகளும் உண்டு.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். மீன ராசியின் அதிபதியான குரு பகவான் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். இந்த மாதம் குடும்ப பிரச்சனைகள் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நிலம், தங்கம், வீடு போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
வேலை தேடி வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவால் சேமிப்பை அதிகரிப்பீர்கள். தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் அளவில்லாத மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)