- Home
- Astrology
- Astrology: 50 ஆண்டுகளுக்குப் பிறகு குருவை நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்.! இந்த ராசிக்காரர்கள் ஒரே இரவில் அம்பானி ஆகப் போறீங்க.!
Astrology: 50 ஆண்டுகளுக்குப் பிறகு குருவை நேருக்கு நேர் சந்திக்கும் சூரியன்.! இந்த ராசிக்காரர்கள் ஒரே இரவில் அம்பானி ஆகப் போறீங்க.!
குரு மற்றும் சூரியன் இருவரும் இணைந்து திரி ஏகாதச யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திரி ஏகாதச யோகம் 2025
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சி அடைந்து மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. இதன் விளைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 12 ஆம் தேதி திரி ஏகாதச யோகம் உருவாகிறது. இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமைந்திருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இந்த முறை சூரியன் வியாழன் இருவரும் 60 டிகிரி கோணத்தில் அமைந்து திரி ஏகாதச யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு ராசி
திரி ஏகாதச யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்க உள்ளது. உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கலாம். மேலும் ஐடி போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு ஒரு குழுவிற்கு தலைமை தாங்கும் பொறுப்புகள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் ஒரு முக்கியமான திட்டம் உங்களிடம் வழங்கப்படலாம். இது உங்கள் பணியை மேலும் மேம்படுத்த ஒரு வாய்ப்பாகும். தொழிலதிபர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளால் பயனடைவீர்கள். திருமணமானவர்களுக்கு உறவுகள் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உங்கள் கௌரவம் அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
சிம்ம ராசி
திரி ஏகாதச யோகம் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல பலன்களை வழங்க உள்ளது. இந்த காலத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். நீங்கள் புதிய செல்வ பாதைகளை உருவாக்குவீர்கள். வணிகம் செய்து வருபவர்கள் நிதி ரீதியாக வளமான வாழ்வைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். குறைந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான கடினமாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்.
மிதுன ராசி
திரி ஏகாதச யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களைத் தரும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். நிலுவையில் இருக்கும் வேலைகள் நிறைவடையும். இத்தனை நாட்களாக அடைக்க முடியாமல் இருந்த கடன்கள் தீரும். கடன்களை அடைப்பதால் மன அமைதி உண்டாகும். புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்களாக இருந்தால் அதை பெரிய அளவில் விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)