MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது.. மனஅழுத்தம், பண நஷ்டம் வரும்.. முழு லிஸ்ட் இதோ

இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது.. மனஅழுத்தம், பண நஷ்டம் வரும்.. முழு லிஸ்ட் இதோ

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்கம் எல்லா ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் தருவதில்லை. சில ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் பண நஷ்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனைப் பற்றி ஜோதிடம் என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 13 2026, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜோதிடப்படி தங்கம் அணிய கூடாத ராசிகள்
Image Credit : Asianet News

ஜோதிடப்படி தங்கம் அணிய கூடாத ராசிகள்

இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டும் அல்ல. அந்த செல்வத்தின் அடையாளம், லட்சுமி தேவியின் அருளாகவும் பார்க்கப்படுகிறது. திருமணம் முதல் முதலீடு வரை பல விஷயங்களில் தங்கத்துக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, எல்லா ராசிக்காரர்களுக்கும் தங்கம் அதிர்ஷ்டத்தைத் தராது என்பதுதான் சுவாரஸ்யமான தகவல். சில ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் வாழ்க்கையில் தடைகள், மனஅழுத்தம், பண நஷ்டம் போன்றவை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தங்கம் அணிந்தால் ஏற்படும் பாதிப்புகள்
Image Credit : Getty

தங்கம் அணிந்தால் ஏற்படும் பாதிப்புகள்

ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். ஜோதிடம் குரு மற்றும் சுக்கிரன் இருவருக்கும் இயல்பாகவே முரண்பாடு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தங்கம் குருவின் காரகமாக கருதப்படுவதால், ரிஷப ராசிக்காரர்கள் அதிகமாக தங்கம் அணிந்தால் தொழிலில் எதிர்பாராத இழப்புகள் அல்லது குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் உருவாகும் என நம்பப்படுகிறது. குறிப்பாக புதிய வியாபாரம் தொடங்கும் நேரங்களில் அதிக தங்க ஆபரணங்களை தவிர்க்க சில ஜோதிடர்கள் ஆலோசனை தருகின்றனர்.

Related Articles

Related image1
Indra Yog 2026: இன்று உருவாகும் இந்திர யோகம்: 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பொற்காலம் ஆரம்பம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Shani Transit: ரேவதி நட்சத்திரத்தில் சனி: இந்த 4 ராசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்
35
ராசிப்படி தங்கம் அணிவது நல்லதா
Image Credit : Getty

ராசிப்படி தங்கம் அணிவது நல்லதா

மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். இவர்கள் தங்கம் அணிந்தால் மன அமைதி பாதிக்கப்படலாம். எந்த வேலை செய்தாலும் தடை, தேவையற்ற செலவுகள், முடிவெடுக்க குழப்பம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜோதிட நம்பிக்கைகள் சொல்கின்றன. மேலும் கன்னி ராசிக்காரர்களுக்கும் தங்கம் பெரிதாக ஏற்றதாக இல்லை என சிலர் கருதுகின்றனர். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரங்களில் அதிக தங்க ஆபரணங்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.

45
தங்கம் அணிய முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
Image Credit : Getty

தங்கம் அணிய முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

சனி பகவானால் ஆட்சி செய்யப்படும் கும்ப ராசிக்காரர்களுக்கும் தங்கம் எப்போதும் நல்ல பலன் தராது என ஜோதிடம் குறிப்பிடப்படுகிறது. தங்கம் அணிவதால் சனியின் பலன் குறையக்கூடும். இதன் காரணமாக உடல்நல குறைவு, வேலை தாமதம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் மேலும் தெரியவந்துள்ளது. குரு மற்றும் சனி கிரகங்களுக்கு இடையிலான பகை உணர்வே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

55
எந்த ராசிக்கு தங்கம் அதிர்ஷ்டம் தரும்
Image Credit : Asianet News

எந்த ராசிக்கு தங்கம் அதிர்ஷ்டம் தரும்

மற்றொரு பக்கம் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் நல்ல அதிர்ஷ்டத்தையும் வளர்ச்சியையும் தரக்கூடும் என நம்பப்படுகிறது. இருப்பினும் ஜோதிடம் என்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. ஒரே ராசியில் பிறந்த அனைவருக்கும் ஒரே பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் தங்கம் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை தனிப்பட்ட ஜாதக அமைப்பை பார்த்து முடிவு செய்வது சிறந்தது. சிறிய மோதிரம் அல்லது சங்கிலி அணிந்து சில நாட்கள் கவனித்து பார்த்த பிறகு தீர்மானம் எடுப்பது பாதுகாப்பான வழியாக இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
தங்கம்
தங்க நகை
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று விஷ யோகம்.! 5 ராசிகளுக்கு சிக்கல், பணப் பற்றாக்குறை ஏற்படும்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image2
Astrology: ஆளுமைத் திறன் + வெற்றி.. இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 'மெகா' அதிர்ஷ்டசாலிகள்! உங்க மாதம் இருக்கா?
Recommended image3
Panchang Yog 2026: கூட்டணி அமைத்த சனி சுக்கிரன்.! 3 ராசிகளுக்கு அடிச்சது ஜாக்பாட்! பேங்க் பேலன்ஸ் டபுளாகும்!
Related Stories
Recommended image1
Indra Yog 2026: இன்று உருவாகும் இந்திர யோகம்: 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! பொற்காலம் ஆரம்பம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Shani Transit: ரேவதி நட்சத்திரத்தில் சனி: இந்த 4 ராசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved