MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இறந்தவர்களின் துணிகள் மற்றும் நகைகளை அணியலாமா? கருட புராணம் தரும் எச்சரிக்கை.! மீறினால் ஏற்படும் விளைவுகள்.!

இறந்தவர்களின் துணிகள் மற்றும் நகைகளை அணியலாமா? கருட புராணம் தரும் எச்சரிக்கை.! மீறினால் ஏற்படும் விளைவுகள்.!

Can We Wear Dead Person's Clothes? : இறந்தவர்களின் உடைமைகள் குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய உடைகள், நகைகளை மற்றவர்கள் பயன்படுத்துவது குறித்த சந்தேகம் பலருக்கும் உண்டு. இது குறித்து கருட புராணம் கூறும் விளக்கங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 30 2026, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இறந்தவர்களின் துணிகளை பயன்படுத்தலாமா? (Can We Wear Dead Person's Clothes?)
Image Credit : Gamini AI

இறந்தவர்களின் துணிகளை பயன்படுத்தலாமா? (Can We Wear Dead Person's Clothes?)

கருட புராணம் ஆனது இந்து தர்மத்தின் மரண மரணத்திற்குப் பிறகு நடக்கும் நிலைகளை விளக்கும் நூலாகும். மரணத்திற்குப் பிறகு ஒரு மனிதனின் ஆன்மா மற்றும் அது சார்ந்த விஷயங்களை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. இந்த நிலையில் இறந்த ஒருவரின் உடைமைகள் மற்றும் நகைகளை மற்றவர்கள் பயன்படுத்துவது குறித்து கருட புராணம் சில முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. கருட புராணம் கூறும் தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இறந்தவர்களின் ஆன்மா மற்றும் பொருட்கள்
Image Credit : Pinterest

இறந்தவர்களின் ஆன்மா மற்றும் பொருட்கள்

கருட புராணத்தின்படி ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் பொழுது அவன் பயன்படுத்திய பொருட்கள் மீது அவனுக்கு அதிகப்படியான பற்று இருக்கும். ஒரு நபர் இறந்த பிறகு அவரது ஆன்மா உடனடியாக அந்த உடலை விட்டு விலகி விடுவதில்லை. தான் வாழ்ந்த வீடு மற்றும் தான் நேசித்த பொருட்கள் மீதான ஈர்ப்பு அந்த ஆன்மாவிற்கு அதிகமாக இருக்கும். இறந்தவர்களின் உடமைகளை அல்லது நகைகளை ஒரு நபர் அணியும்பொழுது அந்த ஆன்மாவின் ஆற்றல், அணிபவர் மீது தாக்கத்தை செலுத்தக்கூடும். இது சில நேரங்களில் மனரீதியான குழப்பங்கள் அல்லது உடல் நலக் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.

Related Articles

Related image1
Chanakya Niti: இந்த 5 குணங்களைக் கொண்ட பெண்களே வீட்டின் உண்மையான மகாலட்சுமிகள்.! சாணக்கியரின் அறிவுரை.!
Related image2
Garuda Puranam : காலையில் எழுந்தவுடன் 'இதை' மட்டும் செய்யுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
35
இறந்தவர் உடமைகளை என்ன செய்ய வேண்டும்?
Image Credit : Pinterest

இறந்தவர் உடமைகளை என்ன செய்ய வேண்டும்?

உடைகள் என்பது ஒருவரின் உடலோடு நேரடியாக தொடர்பில் இருந்தவை. இறந்தவர்களின் கர்ம வினைகளும், எண்ண அலைகளும் அந்த உடைகளில் தங்கியிருக்கும். இதை மற்றவர்கள் அணியும் பொழுது இறந்தவர்களின் குணாதிசயங்கள் அல்லது அவர்களுக்கு இருந்த நோய்கள் அணிபவரை பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இறந்தவர்களின் உடைகளை மற்றவர்கள் அணிவதை சாஸ்திரங்கள் பொதுவாக தவிர்க்கச் சொல்கின்றன. இந்த துணிகளை யாருக்காவது தானமாக வழங்குவது,்சாலையோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு வழங்குவது போன்றவற்றை செய்யலாம். நெருங்கிய ரத்த பந்தங்கள் கூட இறந்தவர்களின் ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

45
இறந்தவர்களின் நகைகளை அணிவது சரியா?
Image Credit : Pinterest

இறந்தவர்களின் நகைகளை அணிவது சரியா?

இறந்தவர்களின் நகைகள் குறித்த விதிகள் சற்று மாறுபடுகின்றன. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் தன்மைக் குறைவு என்றும், அவற்றை சுத்திகரிக்க முடியும் என்பது நம்பப்படுகிறது. குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் நகைகளை அணிவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அணிவதற்கு முன்பாக முறையான வழிபாடுகள் செய்ய வேண்டும். இறந்தவர்களின் நகைகளை அப்படியே அணியாமல் அவற்றை உருக்கி புதிய ஆபரணங்களாக செய்து அணியலாம் அல்லது கங்கை நீரிலோ புண்ணிய நதிகளின் நீரிலோ நனைத்து சுத்திகரித்து, குலதெய்வத்தின் காலடியில் வைத்து பூஜை செய்து அணிவது பாதுகாப்பானது.

55
சாஸ்திரங்கள் கூறும் துக்க கால விதிகள்
Image Credit : Pinterest

சாஸ்திரங்கள் கூறும் துக்க கால விதிகள்

ஆன்மீகத்தை தாண்டி இதில் உளவியல் உண்மையும் உள்ளது. இறந்தவர் பயன்படுத்திய பொருளைப் பார்க்கும் பொழுது அவர்களை பற்றிய நினைவுகள் மீண்டும் மீண்டும் வரும். இது துக்கத்தில் இருப்பவர்களை அந்த நினைவுகளில் இருந்து மீள விடாமல் தடுக்கும். புதிய தொடக்கத்திற்கு பழைய பொருட்களின் பிடியிலிருந்து விடுபடுவது அவசியம். இந்த தகவல்கள் அனைத்தும் புராணங்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்பட்டவை மட்டுமே. ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் குடும்ப வழக்கங்களை பொறுத்து இதை மாறுபடலாம். சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது இறந்தவர்களின் பொருட்களை அணிய விரும்புபவர்கள் தாராளமாக அதை செய்து கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lucky Birth Dates: இந்த தேதிகள்ல பொறந்த பொண்ணுங்க ரொம்ப ஸ்பெஷல்... இவங்க லைஃப்ல வந்தா கொண்டாட்டம் தான்!
Recommended image2
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சிக்குப் பிறகு 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அள்ள அள்ள பணம்.! 12 வருட கஷ்டங்கள் முடிவுக்கு வருகிறது.!
Recommended image3
Daily Love Horoscope: காதலர்களுக்குப் பொன்னான நாளா? சோதனையான நாளா? இன்றைய 12 ராசிபலன் இதோ!
Related Stories
Recommended image1
Chanakya Niti: இந்த 5 குணங்களைக் கொண்ட பெண்களே வீட்டின் உண்மையான மகாலட்சுமிகள்.! சாணக்கியரின் அறிவுரை.!
Recommended image2
Garuda Puranam : காலையில் எழுந்தவுடன் 'இதை' மட்டும் செய்யுங்கள்.. பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved