MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rahu Transit: ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் ராகு பெயர்ச்சி.. ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவே உஷாரா இருக்கணும்!

Rahu Transit: ஆட்டத்தை ஆரம்பிக்கப்போகும் ராகு பெயர்ச்சி.. ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவே உஷாரா இருக்கணும்!

Astrology: ஒருவரது வாழ்வில் திடீர் திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவதில் ராகுவிற்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், வரும் ஜூன் 30-ம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 19 2026, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராகு பகவான்
Image Credit : ChatGpt

ராகு பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகவும், மிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும் ராகு பகவான் பார்க்கப்படுகிறார். ஒருவரது வாழ்வில் திடீர் திருப்பங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவதில் ராகுவிற்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில், வரும் ஜூன் 30-ம் தேதி ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் 2027 ஏப்ரல் வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் காரணமாக குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை, தொழில் மற்றும் நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் சில சவால்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத திடீர் செலவுகள் அதிகரிக்கும். பண இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி விவகாரங்களில் அத்துமீறி முதலீடு செய்வதை தவிர்க்கவும். எந்த ஒரு செயலை செய்தாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும், சிறுசிறு குழப்பங்களும் வந்து நீங்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் தற்காலிகத் தடைகள் வரலாம். வேலையில் சில பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

Jupiter Transit in Poosam: அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் 4 ராசிகள்! இன்று நிகழும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் யாருக்கு ஜாக்பாட்?

Related Articles

Related image1
லட்சுமி நாராயண யோகம் 2026: கோடீஸ்வரர்களாகப் போகும் 4 ராசிகள்.. அள்ள அள்ளக் குறையாத செல்வம்!
Related image2
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
35
மிதுனம்
Image Credit : Pixabay

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் பொறுமையையும் திட்டமிடலையும் சோதிக்கும் வகையிலான சவால்களைச் சந்திக்கலாம். பெற்றோருடனான உறவில் சிறிய அளவிலான விரிசல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வரவுக்கு மிஞ்சிய திடீர் செலவால் பணத்தை சேமிக்க வைக்க முடியாமல் போகும். வாழ்வில் சிரமங்களை சந்திக்கலாம். இருப்பினும், உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். இந்த நேரத்தில் உங்களது ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம். பணிபுரிபவர்களுக்குப் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம்.

45
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் குறிப்பாக தங்களது பணியிடத்திலும், பேச்சுவார்த்தைகளிலும் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் இருக்க வேண்டும். புதிதாக தொடங்க நினைக்கும் காரியங்களில் சற்று தாமதம் ஏற்படலாம். எனவே, முக்கியமான முடிவுகளை எடுப்பதை தள்ளிப்போடவும். பழைய கடன்கள் தொடர்பான அழுத்தங்கள் மீண்டும் தலைதூக்கலாம். பண பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு தேவை. அலுவலகத்தில் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. உடன் வேலை செய்வோருடன் வீண் வாக்குவாதங்கள் தவிர்ப்பது உங்கள் நிலையைத் தக்கவைக்க உதவும்.

Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?

55
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மன ரீதியான அழுத்தங்களையும், நிதானத்தையும் சோதிப்பதாக அமையும். தேவையில்லாத மனக் குழப்பங்கள், பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். அன்றாட வேலைகளில் சுறுசுறுப்பு குறைந்து, சில தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவலைகள் வரலாம். சிலருக்கு நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, முடிந்தவரை அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது. பங்குச்சந்தை மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
பணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology By Date Of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நீண்ட ஆயுளும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் கிடைக்குமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Mars Transit : ஜூன் 20-ல் ராசி மாறும் செவ்வாய்... எந்தெந்த ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியால் அதிக பாதிப்பு ஏற்படும்?
Related Stories
Recommended image1
லட்சுமி நாராயண யோகம் 2026: கோடீஸ்வரர்களாகப் போகும் 4 ராசிகள்.. அள்ள அள்ளக் குறையாத செல்வம்!
Recommended image2
Venus Ketu Conjunction: கடக ராசியில் சந்திக்கும் பரம எதிரிகள்.! சுக்கிர கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பெரும் சிக்கல்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved