- Home
- Astrology
- பிப்ரவரி முதல் வாரத்தில் லட்சுமி நாராயண ராஜயோகம்.! 5 ராசிகளுக்கு பதவி உயர்வு.! கோடீஸ்வர யோகம்.!
பிப்ரவரி முதல் வாரத்தில் லட்சுமி நாராயண ராஜயோகம்.! 5 ராசிகளுக்கு பதவி உயர்வு.! கோடீஸ்வர யோகம்.!
பிப்ரவரி 2026 ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்த மாதமாக இருக்கும். பிப்ரவரி 3 ஆம் தேதி, சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகம் உருவாக இருக்கிறது. அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Lakshmi Narayana Yoga 2026
ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 2026 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. பிப்ரவரி 3 ஆம் தேதி புதன் கிரகம் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அதே நாளில் சுக்கிரனும் கும்ப ராசியிலும் இணைவார். இதனால் சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகம் உருவாகும்.
தொடர்புடைய கட்டுரைகள்: https://tamil.asianetnews.com/gallery/astrology/surya-peyarchi-2026-in-makara-rasi-will-bring-luck-and-money-to-5-zodiac-signs-3t9ybfz
மேஷம்
மேஷ ராசிக்கு 11ஆம் வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இது வருமான ஸ்தானம் ஆகும். இந்த ஸ்தானத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் வருமானத்திற்கு புதிய வழிகளை திறக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும்.
ரிஷபம்
சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதி ஆவார். புதன்-சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் உங்கள் ராசியின் 10ஆம் வீட்டில், அதாவது தொழில் ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 9ஆம் வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. இது அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்கு 5ஆம் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இது கல்வி, காதல், குழந்தைகள் தொடர்பானது. பூர்வ புண்ணய ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் கலை, எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காதல் உறவுகள் இனிமையாக மாறும். பொருளாதாரம் வலுப்பெறும்.
கும்பம்
கும்ப ராசிக்கு முதல் வீட்டில் இந்த சேர்க்கை நிகழ்கிறது. இது உங்கள் ஆளுமையை நேரடியாக பாதிக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் உறவு இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே புரிதல் மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

