- Home
- Astrology
- இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து உருவாக்கும் த்விபுஷ்கர யோகம்.! 5 ராசிகளுக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து உருவாக்கும் த்விபுஷ்கர யோகம்.! 5 ராசிகளுக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
இன்று (ஜனவரி 20) திருவோணம் மற்றும் அவிட்டம் நட்சத்திரங்களின் சேர்க்கையால் சித்தி யோகம், சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் த்விபுஷ்கர யோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல நாளாக அமையும். அனுமன் அருள் இன்று பரிபூரணமாக கிடைக்கும். இதனால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். இந்த மூன்று யோகங்களும் தொழிலில் லாபகரமான வாய்ப்புகளை வழங்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குறிப்பாக தந்தை மற்றும் வாழ்க்கைத் துணை மூலம் சாதமான பலன்கள் கிடைக்கும். மேலும் மாமனார் அல்லது மைத்துனர் வழியில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரிகளை வெல்லும் நாளாக அமையும். பொறுமை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். வணிகத்தில் லாபம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளைக் காண்பீர்கள். இதுவரை வாழ்வில் இருந்து வந்த தடைகள் விலகும். கடினமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிகளைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதிநிலை மேம்படும். தொழில் லாபம் தரும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும் நாளாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். வேலை மாற்ற நினைத்தால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இது ஒரு நல்ல நாள். தனியார் வேலை செய்து வருபவர்களுக்கு போனஸ், சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். கடந்தகால முதலீடுகளால் நிதி ரீதியாக பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் நல்ல விஷயங்கள் நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். அடுத்த சில தினங்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். வேலையில் சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி நல்ல செய்திகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வகையிலும் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் முக்கிய ஆசைகள் இந்த நாளில் நிறைவேறலாம். வீடு, கார் அல்லது இருச்சக்கர வாகனம் வாங்கும் கனவு நனவாகும் வாய்ப்புள்ளது. தொழில், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய செல்வ வளங்களையும், சிறப்புகளையும் பெறுவீர்கள். நிரந்தர சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

