- Home
- Astrology
- Dwidwadash Yoga 2026 : ஏப்ரலில் 5 முறை உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! ஒரே இரவில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Dwidwadash Yoga 2026 : ஏப்ரலில் 5 முறை உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! ஒரே இரவில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.!
Dwidwadash Yoga 2026 : ஜோதிடத்தில் துவித்வாதச யோகம் ரொம்பவும் மங்களகரமான, வாய்ப்புகள் நிறைந்த யோகமாகப் பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1, 4, 19, 23, மற்றும் 29, 2026-ல் உருவாகும் இந்த யோகம், 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும்.

Dwidwadash Yoga 2026 Lucky Zodiac Signs
வேத ஜோதிடத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 2 மற்றும் 12-வது வீட்டில் இருக்கும்போது இந்த யோகம் உருவாகும். அதனால்தான் இது 'துவித்வாதச' என அழைக்கப்படுது. ஏப்ரல் 2026-ல் 1, 4, 19, 23, 29 ஆகிய தேதிகளில் இந்த யோகம் உருவாகுது. சுக்கிரன், நெப்டியூன், சனி, சூரியன், யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் இந்த யோகத்தை உருவாக்குகின்றன. இந்த யோகம் திடீர் பண வரவு, சிக்கிய பணம் திரும்பக் கிடைப்பது, புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புகளைக் குறிக்கிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் பணபலத்தைக் கொண்டு வரும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கலாம். முதலீடுகள் நல்ல லாபம் தரும். வேலையில் உங்கள் திறமையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். பழைய நண்பர்கள் மூலம் வேலைக்கான புதிய வாய்ப்புகள் வரலாம். சேமிப்புப் பழக்கம் உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் வெற்றிக்கு புதிய வழிகளைத் திறக்கும். வேலையில் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரலாம். புதிய பிசினஸ் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் தலைமைப் பண்பும் முடிவெடுக்கும் திறனும் மேம்படும். சமூகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகள் ஆதரவால் உங்கள் வேலைகள் சீக்கிரம் முடியும். உங்கள் திட்டங்கள் மற்றவர்களைக் கவர்ந்து ஆதரவைப் பெற்றுத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் லாபத்தையும் சமநிலையையும் கொண்டு வரும். உங்கள் நிதிநிலைமை மேம்படும். புதிய வருமான வழிகள் உருவாகலாம். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உறவுகள் இனிமையாக மாறும். பார்ட்னர்ஷிப் தொழில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். உங்கள் சமயோசித புத்தியால் பல சிக்கலான பிரச்சனைகளை எளிதாகத் தீர்ப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் அதிர்ஷ்ட அலையைக் கொண்டு வரும். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். கல்வி மற்றும் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாகும். இந்த காலக்கட்டத்தில் தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்கள் அல்லது புதிய அனுபவங்கள் உங்களுக்கு நன்மை தரும்.
மீனம்
மீன ராசிக்காரங்களுக்கு இந்த யோகம் பணரீதியாகவும் மனரீதியாகவும் நன்மை தரும். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். கிரியேட்டிவ் துறைகளில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் கனவுகளை நனவாக்க இது சரியான நேரம். உங்கள் கற்பனைத் திறன் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

